காயல்பட்டினம் குறுக்கத் தெரு - சதுக்கைத் தெரு சந்திப்பிலுள்ள ஒரு வீட்டில் குடிநீர் குழாய் பராமரிப்பிற்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் காட்சிகள்தான் இவை.
நகரில் அனைத்துப் பகுதிகளிலும் பெரும்பாலும் மூன்று முதல் ஐந்து வாசற்படிகள் வைத்தே வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. எனினும், குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையும், சில நேரங்களில் பலமுறையும் - பழைய சாலைகளை முழுமையாக அப்புறப்படுத்தாமல் அவற்றின் மேற்பரப்பிலேயே புதிதாக அமைக்கப்படும் அடுக்கடுக்கான சாலைகள் காரணமாக, பல லட்சம் ரூபாய் பணம் செலவழித்து, பல ஆண்டுகள் ஆயுட்காலத்தை எதிர்பார்த்துக் கட்டப்படும் கட்டிடங்கள், குறைந்த ஆயுளிலேயே பூமிக்குள் கொஞ்சங்கொஞ்சமாக புதையுண்டு போகின்றன.
இதனால், புது வீடு கட்ட பொருளாதார வசதியற்றவர்கள், இருக்கும் வீட்டில் மாடி வைத்து கட்ட ஆசைப்பட்டாலும், புதையுண்ட வீட்டில் மாடி வைத்துக்கட்டுவது வீணான செயல் என்று கருதி, கடன் பட்டேனும் புதிதாக கட்டிடங்களைக் கட்டுவது நகரில் வழமையாகிவிட்டது.
|