காயல்பட்டினம் இரண்டாம் நிலை நகராட்சியின் செயல்பாடுகளில்
திருப்தியின்மை, லஞ்சப் பிரச்சினைகள் போன்ற புகார்களை Kayalpatnam.com இணையதளத்தின் நகர்மன்ற சிறப்புப்
பக்கத்தில் உள்ள புகார் அறையில் தெரிவித்தால், அவற்றை நகராட்சி நிர்வாகத்துறை
(Commissionerate of Municipal Administration - CMA, Chennai), லஞ்ச ஒழிப்பு அலுவலகம் (Directorate of Vigilance and Anti-Corruption) போன்ற உரிய துறைகள்/அதிகாரிகளுக்கு - பொதுநலன் கருதி - காயல்பட்டணம்.காம் இணையதளத்தால் நேரடியாக அனுப்பி
வைக்கப்படும்.
காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் சிறப்பு பக்கத்தில் - புகார்
அறை தவிர நகர்மன்றம் குறித்த அறிமுகம், உறுப்பினர்கள்
/ அலுவலகர்கள் தொடர்பு விபரம், நகர்மன்ற குழுக்கள்
(Committees) விபரம், நகர்மன்ற கூட்ட விபரங்கள், நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள், டெண்டர் விபரங்கள் ஆகியவை
உள்ளன.
நேரடியாக புகார் அளிக்க விரும்புவோர் கீழ்க்காணும் முகவரிகளுக்கு தங்கள் புகார்களை அனுப்பி வைக்கலாம்:
(1)
The Directorate of Vigilance and Anti-Corruption,
NCB 21 TO 28, P.S.Kumarasamy Raja Salai (Greenways Road),
Raja Annamalaipuram, Chennai - 600 028.
(2)
Commissionerate of Municipal Administration,
Municipal Administration Department,
Ezhilagam Annex, 6th Floor, Chepauk, Chennai - 600 005.
(3)
The Secretary to the Government,
Municipal Administration & Water Supply Department,
Government of Tamil Nadu,
Secretariat, Chennai - 600 009.
இது குறித்த துண்டு பிரசுரம் - நகரின் மூன்று ஜும்மாக்களிலும் இன்று விநியோகிக்கப்பட்டது.
|