செய்தி எண் (ID #) 8071 | | |
ஞாயிறு, பிப்ரவரி 26, 2012 |
ஒருவழிப்பாதை வழித்தடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்! |
செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 7940 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (34) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினத்தில் ஒரு வழிப்பாதையை அமல்படுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கடந்த ஜனவரி 6
அன்று உத்தரவு ஒன்று பிறப்பித்திருந்தார்.
அதனை தொடர்ந்து பிப்ரவரி 2 அன்று காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெ.கண்ணையா, பணி
மேற்பார்வையாளர் செல்வமணி, சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் மற்றும் அலுவலர்கள், காயல்பட்டினம் கூலக்கடை பஜாருக்குச் சென்று,
சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களைச் சந்தித்து அவ்வாக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட
உத்தரவிட்டனர்.
மறுநாள் (பிப்ரவரி 3) - காயல்பட்டினம் திருச்செந்தூர் சாலையிலிருந்து தாயிம்பள்ளி வழியே திரும்பி, பெரிய நெசவுத் தெரு, கூலக்கடை பஜார்
வழியாக ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியரின் ஆணையின் தொடர்ச்சியாக இன்று காலை பெரிய நெசவு தெரு - எல்.கே.லெப்பை தம்பி சாலை பாதையில் உள்ள
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்றன. வட்டாச்சியர் வீராசாமி, கிராம அதிகாரி செல்வலிங்கம், நகராட்சி ஆணையர் வீ.எஸ்.
சுப்புலட்சுமி, திருச்செந்தூர் டி.எஸ்.பி ஞானசேகரன், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் பார்த்திபன் உட்பட ஏராளமான அரசு அலுவலர்கள்
அவ்விடத்தில் இருந்து பணிகளை கண்காணித்தனர்.
புகைப்படங்களில் உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
[தலைப்பில் சிறு திருத்தம் செய்யப்பட்டது. @ 15:11/27.02.2012] |