நகராட்சிக்கு செலுத்த வேண்டிய - நிலுவையிலுள்ள கட்டணங்களை செலுத்திட மார்ச் மாதம் 31ஆம் தேதி கடைசி நாள் என காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது:-
காயல்பட்டினம் நகராட்சி பகுதியிலுள்ள வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் நிலுவையிலுள்ளவர்கள், அக்கட்டணங்களை வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டியது.
இவ்வாறு நகராட்சி சார்பில், ஆட்டோ வாகனத்தில் நிறுவப்பட்ட ஒலிபெருக்கி மூலம் நகர் முழுக்க அறிவிப்பு செய்யப்பட்டது. |