ஒவ்வொரு மாதமும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்கு என மின் தடை செய்யப்படுவது வழக்கம். இம்மாதம் - இன்று (பிப்ரவரி 25) காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை - நகரில் மின்சார விநியோகம் இருக்காது என காயல்பட்டினம் மின் நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட நேரத்தில் இன்று நகரில் மின்தடை மேற்கொள்ள்ளப்படவில்லை. இது குறித்து காயல்பட்டினம் மின் நிலைய பொறியாளரிடம் விசாரித்ததில் - இந்த மாதம் (பிப்ரவரி) பராமரிப்புக்கு என மின்வெட்டு ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
4. Re:இந்த மாத மாதாந்திர பராமரி... posted byAbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA)[25 February 2012] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17179
அதிசயம் ஆனால் உண்மை.....
பொதுவாக மின்தடை ஏற்படுவதுதான் செய்திகளில் வரும்....
ஆனால், இன்று இணையதள வரலாற்றில் முதன்முறையாக,
இன்று "மின்தடை" ஏற்படவில்லை என்கின்ற ஒரு அதிசயமான ஆனால் உண்மையான செய்தி வெளியாகி உள்ளது.
இந்நிலை தமிழகித்தில் தொடர்ந்தால், வருங்காலத்தில் www.kayalpatnam.com-இல் "நாளை நகரில் காலை ஐந்து மணிமுதல், மாலை ஆறு மணிவரை மின்சாரம் வழங்கப்படும்" என்ற செய்திதான் பார்க்க முடியும்.
5. Re:இந்த மாத மாதாந்திர பராமரி... posted byTariq (Jeddah)[25 February 2012] IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17181
எலி எட்டு முழ வேஷ்டி கட்டி வருவது எதுக்கு என்றால்...இனி அடுத்த மாதம் முதல் மாதாந்திர பராமரிப்பு மின்வெட்டுக்கு பதிலாக இனி வாராந்திர பராமரிப்பு மின்வெட்டு அமுல்படுத்த போறாங்க போல...ஹும் இதெல்லாம் ஒரு பொழப்பு...
8. Re:இந்த மாத மாதாந்திர பராமரி... posted byhasbullah mackie (Dubai)[25 February 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17190
இன்று நியூஸ் பார்த்தீங்களா?
அம்மையார் அவர்கள் சென்னை யில் 2 மணி நேரம் power cut ஆக போகிறதாம் ....மதுரையில் 4 மணி நேரம் power cut, அப்போ காயலில் எதனை மணி நேரமோ ? என்று தான் விடிவு காலம் பிறக்குமோ இதற்கு....? ஆனா எல்லா பாடசாலைகளிலும் power cut இல்லாமல் பார்த்துக் கொள்ளுவார்களாம்.
9. Re:இந்த மாத மாதாந்திர பராமரி... posted byS S Abdullah (Dubai)[25 February 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17194
அன்பு சகோதர்களே நாம் எல்லோரும் ஒரு மிக முக்கிய செய்தியை மறந்துவிட்டோம்ப்பா . இன்று அம்மாவின் பிறந்த நாள் என்பதை. ஒருநாள் நமது ஊரில் ADMK கூட்டம் நடந்த அன்றும் இரவில் மட்டும் மின்வெட்டு ரத்தானது. இன்று அம்மாவின் birthday க்கு மின்வெட்டு ரத்து. எனவே எல்லாம் சுயநலமே. அவர்களை குறை சொன்னார்கள், இவர்களும் அதையே செய்கிறார்கள். எல்லோரும் ஒன்றே. இந்த மின்வெட்டு பாக்கியை 'களா' எடுக்காமல் இருந்தால் சரி.
10. Re:இந்த மாத மாதாந்திர பராமரி... posted byMafasz (Kayalpatnam)[25 February 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 17195
Man 1: (Cleaning the switch board with water)...
Man 2: Hey are you mad? Why are cleaning it with water? There will be a risk of electric shock...
Man 1: Ha ha ha... Are you new to "TAMILNADU"?
12. Re:இந்த மாத மாதாந்திர பராமரி... posted byT,M,RAHMATHHULLAH (73) (KAYALPATNAM 04639 280852)[26 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 17197
தயவுசெய்து அட்மின் அவர்களும் ஈ , பீ யும் சேர் ந்து காயல்பட்ணத்தில் மற்றும் அதனைச் சார்ந்த ஊர் களுக்கும ஒரு வாரத்தில் இன்ன இன்ன நேரங்களில் மட்டும் கரன்ட் வரும் என அறிவிப்பு செய்ய முயற்ச்சி செய்யுங்கள். சரியா? . உங்களுக்கெல்லாம் புண்ணியம் கிடைக்கும்.
14. Re:இந்த மாத மாதாந்திர பராமரி... posted byZainul Abdeen (Dubai)[27 February 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17230
மின்சாரம் குறித்து சில பல சிறப்பு (சிரிப்பு) உறையாடல்கள்.
தலைவர்: இலவச மின்சாரம் தருவோம்னு சொல்லியும் எப்படி எனக்கு டெபாசிட் போனது?
தொண்டர்: எதிர்கட்சி வேட்பாளர் தடையில்லா மின்சாரம் தருவேன்னு சொல்லி ஓட்டுகேட்டாராம்!
*******
ஆசிரியர்: எதிர்காலத்தில் நீ என்ன கண்டுபிடிப்பாய்?
மாணவன்: கொசுக்களிலிருந்து மின்சாரம் உருவாக்கும் முறையைக் கண்டுபிடிப்பேன் சார்!
*******
அம்புஜம்: நான் 'அந்த' கட்சி வேட்பாளருக்குத்தான் ஓட்டுப்போடுவேன். ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுக்கிறாராம்!
பங்கஜம்: நான் 'இந்த' கட்சி வேட்பாளருக்குத்தான் ஓட்டுப்போடுவேன். ஓட்டுக்கு 100 யூனிட் மின்சாரம் கொடுக்கிறாராம்!
*******
ராமு: அதோ போறாரே! அவர்தான் இந்த ஊரிலேயே பணக்காரர்!
சோமு: அப்படியா!
ராமு: ஆமாம்! அவர் வீட்டுலதான் தினமும் டியூப் லைட் எரியுது!
*******
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross