தமிழ்நாட்டில் கேபிள் டிவி ஒளிபரப்பை முறைப்படுத்திய தமிழக அரசு, அரசு கேபிள் டிவி வாயிலாகவே ஒளிபரப்பு செய்ய வேண்டுமென உத்தரவிட்டது. அதனடிப்படையில், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அரசு கேபிள் டிவி மூலம் ஒளிபரப்புகள் துவக்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினத்தில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நேற்று துவங்கியது. முஹ்யித்தீன் தெருவிலுள்ள நூர் அல்அமான் கேபிள் டிவி நிறுவன அலுவலகத்தில், நேற்றிரவு 07.30 மணியளவில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து, நூர் அல்அமான் கேபிள் டிவி நிறுவத்தார் தெரிவித்துள்ளதாவது:-
காயல்பட்டினத்தில் இதுநாள் வரை நூர் அல்அமான், மரைக்கார் கேபிள், ராஜா கேபிள் டிவி ஆகியோர் தனியார் மூலமாக ஒளி - ஒலி பரப்பி வந்தனர்.
இன்ஷாஅல்லாஹ் இன்றிரவு (நேற்றிரவு) சுமார் 07.30 மணியளவில், திருச்செந்தூர் மாறலாக அரசு கேபிள் ஒலி - ஒளி பண்ணியிருக்கிறார்கள்.
இது நிகழ்ச்சியில், திருச்செந்தூர் ஏ.எம்.என். டிவி மேனேஜர் திரு. நமச்சிவாயம் அவர்கள் மற்றும் நமதூர் லரீஃப், மாலிக், எஸ்.டி.ஹபீப், உமர் அலீ மற்றும் கேபிள் டிவி உரிமையாளர்கள் கே.கபீர், கே.செய்து, கஸ்ஸாலி, முஜீப், ராஜா, சேகர், மனோகர், முத்து கிருஷ்ணன், சங்கர் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
நூர் அல்அமான் கேபிள் டிவி நிறுவன அதிபர் ஹாஜி கே.கபீர் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பை முறைப்படி துவக்கி வைத்தார்.
இவ்வாறு நூர் அல்அமான் கேபிள் டிவி நிறுவனத்தார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |