காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரி சார்பில் நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்ட - பள்ளிகளுக்கிடையிலான கலாச்சாரப் போட்டிகளில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவியர் சிறப்பிடங்களைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர். விபரம் பின்வருமாறு:-
முதற்பிரிவு:
நான்காம், ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் முதற்பிரிவு போட்டிகளில், ஆங்கில பேச்சுப்போட்டியில், அப்பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவி எம்.ஏ.செய்யித் கதீஜா முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
தமிழ் கட்டுரை போட்டியில் நான்காம் வகுப்பு மாணவி ஏ.எம்.எஸ்.முஹம்மத் மஹ்ரூஃபா இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.
ஓவியப் போட்டியில், நான்காம் வகுப்பு மாணவ-மாணவியரான எம்.ஷேக் ஸஃபீர் முதலிடத்தையும், ஏ.கே.ஃபாத்திமா அஃப்ரோஸ் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.
இரண்டாம் பிரிவு:
ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற இரண்டாம் பிரிவு போட்டிகளில், தமிழ் கட்டுரைப் போட்டியில், எட்டாம் வகுப்பு மாணவி ஏ.எம்.ஃபாத்திமா ஃபஸீஹா முதலிடத்தையும், ஓவியப் போட்டியில் எட்டாம் வகுப்பு மாணவி எஸ்.ஏ.உல்ஃபத் முதலிடத்தையும், ஆங்கில பேச்சுப் போட்டியில், எட்டாம் வகுப்பு மாணவி எம்.எஸ்.ஃபாத்திமா முனவ்வரா இரண்டாமிடத்தையும் பெற்றனர்.
மூன்றாம் பிரிவு:
ஒன்பதாம், பத்தாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற மூன்றாம் பிரிவில், அப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவியரான ஏ.எஸ்.ஃபாத்திமா முன்ஷிரா ஆங்கில கட்டுரைப் போட்டியில் முதலிடத்தையும், எல்.எச்.ஆயிஷா சித்தீக்கா ஓவியப் போட்டியில் முதலிடத்தையும் பெற்றனர்.
நான்காம் பிரிவு:
பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற நான்காம் பிரிவில், இப்பள்ளியின் பதினொன்றாம் வகுப்பு மாணவி எஸ்.ஏ.அஹ்மத் முஜாஹிதா ஆங்கில கட்டுரைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றார்.
வெற்றிபெற்ற மாணவ-மாணவியரை பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர் மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர். |