சென்னையிலுள்ள ப்ளூ ஸ்டார் க்ரிக்கெட் அகடமி சார்பில் நடத்தப்பட்டு வரும் டி-20 க்ரிக்கெட் போட்டியில் காயல்பட்டினத்தைச் சார்ந்த காயல் க்ரிக்கெட் க்ளப் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. இதுகுறித்து, காயல் க்ரிக்கெட் க்ளப் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை பின்வருமாறு:-
சென்னயில் BLUE STAR CRICKET ACCADAMY சார்பில் நடைபெறும் T20 கிரிக்கெட் போட்டியில், சென்னயில் புகழ்பெற்ற 11 அணிகள் பங்குபெற்று league முறையில் விளையாடி வருகின்றனர்.
இச்சுற்றுப்போட்டியில், காயல்பட்டினம் KAYAL CRICKET CLUB அணியும் பங்கேற்று, 7 போட்டிகளில் வெற்றி, 1 போட்டியில் சமன், 2 போட்டிகளில் தோல்வி என்ற கணக்கில், 15 புள்ளிகள் பெற்று அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை முருகப்பா கிரிக்கெட் கிளப் மைதானத்தில் வைத்து MASTI CRICKET CLUB அணியுடன் நடந்த அரையிறுதிப் போட்டியில், நாணய சுழற்சியில் காயல் க்ரிக்கெட் க்ளப் அணித் தலைவர் நிஜாம் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.
துவக்கம் முதல் அவ்வணி சிறப்பாக ஆடியது. அவ்வணியின் சுலைமான் 35 ஓட்டங்கள், ஷாஹுல் 33 ஓட்டங்கள், ஷேக் 19 ஓட்டங்கள், உமர் 11 ஓட்டங்கள் பெற்று, 20 ஓவர் நிறைவில் 9 வீரர்களை இழந்து 140 ஓட்டங்களை அந்த அணி பெற்றது.
அடுத்து ஆடிய MASTI CRICKET CLUB அணி, ஆரம்ப முதல் அடித்தாட துவங்கினர். பிறகு KAYAL CRICKET CLUB அணியின் உமர், இம்ரான் கைசாலி ஆகியோர்களை வேகப்பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க இயலாமல் திணறினர்.
நிஜாம் 3 வீரர்களையும், கைசாலி 2 வீரர்களையும், ஷாஹுல், இம்ரான், உமர் தலா ஒரு வீரரையும் ஆட்டமிழக்கச் செய்தனர். அந்த அணியின் வீரர் ஷாஹுல் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம், காயல் க்ரிக்கெட் க்ளப் அணி, பகல்-இரவு போட்டியாக நடைபெறும் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
இவ்வாறு, காயல் க்ரிக்கெட் க்ளப் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
காயல் க்ரிக்கெட் க்ளப் சார்பாக,
காயல் M.M.ஷாஹுல் ஹமீத்,
சென்னை. |