தொடர் மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்க வலியுறுத்தியும் இம்மாதம் 06ஆம் தேதியன்று (நாளை) கடையடைப்புக்கு, காயல்பட்டினம் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை உள்ளடக்கிய பிரசுரம் நகரில் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் இன்று காலை முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இக்கடையடைப்பிற்கு ஒத்துழைப்பளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளும் பிரசுரமொன்று இன்றிரவு முதல் நகரிலுள்ள வணிக நிறுவனங்களில் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
முரண்பட்ட இவ்விரு அறிவிப்புகள் காரணமாக, நகர வணிகர்கள் நாளை கடைகளைத் திறப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.
தகவல் உதவி:
‘நட்புடன்‘ முத்து இஸ்மாஈல்,
காயல்பட்டினம்.
3. கடலில் பொழியும் மழை posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[05 March 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17483
இப்போவே தலை சுத்துதே.
என்னதான் கதவடைப்பு செய்தாலும், போராட்டம் நடத்தினாலும் ஒன்றும் ஆகப்போவது இல்லை. இருந்தால் தானே கொடுக்க.
குறைந்தது ஐந்து வருடங்களுக்கு இப்படி தான். கூடங்குளம் மாதிரி மூன்று நான்கு வந்தாலும் சமாளிப்பது கஷ்டம்தான். புதிய திட்டங்கள் துவங்கினாலும், உபயோகத்திற்கு வர குறைந்தது 5 வருடங்கள் ஆகும்.
என்ன கூப்பாடு போட்டாலும் " கடலில் பொழியும் மழை தான்".
ஆக, ஊரின் பெயரை கெடுக்காமல் இருந்தால் சரி. எந்த செயல் செய்தாலும் அதனால் பிரயோஜனம் இருக்கணும். இந்த பூட்டுதலால்...???!!
5. Re:பூட்டனுமா... திறக்கனுமா..... posted byCnash (Makkah)[05 March 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17485
மின்வெட்டை கண்டித்து அரசிற்கு எதிராக போராட குடிமக்கள் என்ற முறையில் நமக்கு உரிமை இருக்கலாம்... சம்பந்தபட்டவர்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் கடையடைப்பு நடத்தலாம்!!! ஆனால் சம்பந்தபட்ட ஊர்மக்கள் அஞ்சும், எதிர்க்கும், அதற்க்கு எதிராக போராடும் அந்த கூடன்குள அணுமின் நிலையத்தை திறக்க சொல்லி கடையடைப்பு நடத்த இங்கே உள்ளவர்களுக்கு என்ன உரிமை உள்ளது என்று தெரிய வில்லை!!
இதையே ஒரு உதாரணமாக கொண்டு நாளை DCW தொழிற்சாலை ஒரு சில ஊர்களுக்கு நன்மை பயக்கிறது என்றும், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் எங்களுக்கு பயன் என்றும் மற்ற ஊர்காரர்களும் போராடினால் நாம் எற்றுகொள்வோமா?
ஒரு கூட்டணி தலைவர் எங்கிருந்தோ அவர் அரசியல் விளையாட்டுக்காக கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று கூவிய மறு நிமிடமே அந்த தலைவரின் நம்பிக்கைகுரிய கூட்டணி இவ்வளவு வீரியாமாக செயல் பட வேண்டுமா? அதே தலைவர் தனது 2000 / 2004 ஆண்டு தேர்தல் அறிக்கைகளின் கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் என்றும், அவருடைய MP பாராளுமன்றத்தில் அதை எதிர்த்து குரல் கொடுத்தும் அவர் மறந்து இருக்கா விட்டாலும் நாம் மறக்க வேண்டும்.
8. சிரிக்கணுமா...? அழுவணுமா...? posted byM.N.L.முஹம்மது ரஃபீக், (காயல்பட்டணம்.)[05 March 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 17492
அட! போங்கப்பா...!!!
அதெப்படி கல்யாணப் பந்தியிலெ தாளஞ்சோத்துக்கு மட்டும் தாராளமா ஒற்றுமையா இருக்கிறீங்க? எப்படியும் போங்க!
இப்ப குழம்புறது, கடைக்காரர்களும், பொதுமக்களும் தான்!
மின் வெட்டைக் கண்டித்து ஒருநாள் அடையாளக் கடையடைப்புன்னு நோட்டீஸ் விட்டிருந்தா எல்லா தரப்பினரின் ஆதரவும் கிடைத்திருக்கும். அப்படி இல்லாமெ கூடங்குளம் அணு மின் நிலயத்தைத் திறக்கக் கோரி என்று போட்டது தான் வில்லங்கமாயிடுச்சு!
ஆமா! ஆமா! நாளையின் நிலமை இப்பவே தெரிஞ்சுபோச்சு! நாளைக்கு சில கடைகள் திறந்திருக்கும், சில கடைகள் மூடியிருக்கும். ஒரு சாரார் கடையடைப்பு வெற்றின்ணு நியூஸ் கொடுப்பாங்க! மறு சாரார் தோல்வின்ணு நியூஸ் கொடுப்பாங்க! அவ்ளோதானே?
9. Re:பூட்டனுமா... திறக்கனுமா..... posted byMOHAMMED LEBBAI MS (dxb)[05 March 2012] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17496
10. காயல் எடுப்பார் கைபிள்ளை போல்... posted bySalai. Mohamed Mohideen (USA)[05 March 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 17498
ஏன் இந்த அவசர கூட்டம் மற்றும் கடையடைப்புகள். பக்கத்து தொகுதியில் இடைத்தேர்தல் வேறு நடக்கின்றது. இது யாரையும் திருப்பதி படுத்துவதட்காகவா? என்ன நடக்கின்றது என்று ஒன்றுமே புரியவில்லை.
அக்கூட்டத்தில் தீர்மானம் (தீர்மானம் 4 - அடையாள கடையடைப்பு செய்தி எண்:8096) ஏற்றி அது ஊடகம் மூலம் எல்லோரும் அறியும் வரை அமைதியாக இருந்துவிட்டு இப்போது நாங்கள் எழுத்து / வாய்மொழி மூலமோ ஆதரவு தரவில்லை,
எங்களுக்கும் அந்த கடையடைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முன்னுக்கு பின் முரண் போல் தெரிகிறது. எங்களை வைத்து யாரும் காமடி கீமடி பண்ணலையே??
ஆனால் ஒன்று மற்றும் மிக தெளிவாக புரிகிறது. பொதுவாக இதுமாதிரியான தீர்மானங்களை ஐக்கிய பேரவை எல்லோரையும் (?) கூட்டி எடுத்த முடிவுகளை மாகா ஜனத்திட்க்கு அறிவிப்பார்கள். ஆனால் இன்று ஐக்கிய பேரவையினரும் அழைக்கப்பட்டு 'மற்றவர்கள்' முடிவு எடுத்து அறிவிட்கின்றார்கள். பேரவை அமைதி காப்பதை பார்த்தால் இன்னும் நம் நகராட்சி தேர்தல் முடிவிலிருந்து இன்னும் மீளாததால் கடைசியில் நமதூர் 'எடுப்பார் கைபிள்ளை போல்' ஆகிவிட்டது என்றே நினைக்க தோனுகிறது.
தொடர் மின்வெட்டுக்கு மற்றும் அரசு அறிவித்த நேரப்படி மின்வெட்டு கண்டனம் என்றால் நேராக நமது EB ஆபீஸ் முன்னாடி போய் நூதன போராட்டம் நடத்தலாம் அல்லது இங்குள்ள EB ஆபிசரை சந்தித்து நமது கோரிக்கைகளை நிறைவேற்ற சொல்லலாம். அதற்க்கு ஒரு கடையடைப்பு தேவையா???
கூட்டி கழிச்சு பார்த்தா... கூடங்குளம் அணுமின் நிலையம் விவகாரதிட்காக இக்கடையடைப்பு போல் தெரிகிறது. இவ்விசயத்தில் மாநிலமே இரண்டு பட்டு கிடக்கின்றது. இதற்காக எல்லா ஊரிலும் கடையடைப்பு நடக்கின்றதா? நமதூரில் மட்டும் கடையடைப்பு நடத்தினால் பிரச்சனை தீர்ந்து விடுமா?
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு 'சுயநலம்' பிரதானமாகி போனதினால் தான் இடியாப்ப சிக்கலில் இடிந்து போயிருக்கிறது இவ்விவகாரம். லோக்கல் முதல் மத்திய மாநில அரசுகள் வரை இதை அரசியலாக்கி இன்னும் பல வருடங்கள் வரை பொழப்பை நடத்த போகிறார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
11. Re:பூட்டனுமா... திறக்கனுமா..... posted byP.S.ABDUL KADER (jeddah)[05 March 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17499
கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்னை பற்றி தமிழக அரசு எந்த கவலையும் படவிலை. சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதால், தேர்தல் முடிவுக்கு பின்னர் தொடர்மின்வெட்டுக்கு நல்ல முடிவு வரும்.
12. Re:பூட்டனுமா... திறக்கனுமா..... posted byVilack SMA (Hong Shen , Siacun)[05 March 2012] IP: 121.*.*.* China | Comment Reference Number: 17500
" பூட்டனுமா , திறக்கனுமா " , இதெல்லாம் ஒரு செய்தியா ? வழமைபோல் , நம்மிடையே ஒற்றுமை இல்லை என்பதைத்தான் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறோம் .
" பூட்டனுமா ....... திறக்கனுமா ... ? " காலையில் பூட்டி , மாலையில் திறந்து விடுங்கள் என்று நண்பரிடம் சொல்லி இருக்கிறேன் . அதற்கு அவர் , காலையில் திறந்து , மாலையில் பூட்டுவதாக சொன்னார் . EGO இருக்கும் வரை ,( கியாமத் நாள் ) வரை , இந்த ஊரில் ஒற்றுமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று ஒதுங்கி விட்டேன்.
13. ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலை பட்ட கதை அரசியல் வாதிகளின் கடை அடைப்பு போராட்ட கதை...! posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.. (தமிழன்...)[06 March 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 17502
ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலை பட்ட கதை அரசியல் வாதிகளின் கடை அடைப்பு போராட்ட கதை...!
ஊரின் பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் கவலை படவேண்டியதை அரசியல் ஆதாயம் தேடுகிறது...! இந்த அரசியல் ஓநாய்கள்...!
பொதுமக்களும் வியாபாரிகளும் இந்த ஓநாய்கள் நடத்தும் கடை அடைப்பு குழப்ப போராட்ட (நாடகத்தில்) இருந்து விலகி இருப்பது மிக உகந்தது.. தான் தனது கட்சி தலைவரிடம் பெயர் வாங்க பொது மக்களையும் வியாபாரிகளையும் பலிகடா ஆக்கபடுகிறது..!
அணைத்து ஜமாஅதுக்களும், பொது மக்களும் மற்றும் வியாபாரிகளும் கூடி.. கூடிய விரைவில் மின்வெட்டை கண்டித்து ஒரு நல்ல ஆர்பாட்டத்தை நடத்துவார்கள்...! என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது...
14. தேவை அற்ற வேலை ..... posted byMAHMOOD HASAN(mammaash) (QATAR)[06 March 2012] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 17503
தொடர் மின் வெட்டை கண்டித்தும் நல்ல மாற்று வழி காண வேண்டும் என்றும் போராடலாம்.
அணு மின் நிலையம் திரபதற்கு குரல் கொடுப்பது என்பது தேவை அற்ற வேலை.அரசியல் உள் நோக்கு....
அணு மின் நிலையம் வந்தால் 8 மணி நேரம் மின் வெட்டு 6 மணி நேரம் ஆகலாம் ஆனால் நோய்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்..!!!
16. ஊரான் வீட்டு நெய்யே! என் பொண்டாட்டி கையே! posted by(சதக்) இப்னு சாகிப் (Dammam, Saudi Arabia)[06 March 2012] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17506
ஊரான் வீட்டு நெய்யே! என் பொண்டாட்டி கையே! என்பது போல் உள்ளது முஸ்லிம் லீக்குடைய அறிக்கை.
நகர அரசியல் கட்சியினர் என்று பிரசுரம் போடும் இவர்களால் எந்த அரசியல் கட்சியினர்கள் இவர்களின் தீர்மானத்தை ஆதரிக்கிறார்கள் என்று தெளிவாக சொல்ல முடியுமா? வேண்டுமென்றால் திமுகவும், பாஜகவினரும் ஆதரிக்கிறார்கள் என்பார்கள்.
மக்களின் உயிரோடும், நம்முடைய சந்ததியினரோடும் அரசியல் செய்யும் லீக்கினர் நாளை தாரங்கதாராவினால் பலன்கள் அதிகம் எனவே அவர்களை ஆதரித்தும் கடையடைப்பு செய்ய வேண்டும் என்றும் சொல்வார்கள் போலும். எல்லாம் அரசியல். எல்லாவற்றிலும் அரசியல்!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross