தமிழகத்தில் ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வு இன்று துவங்கி, 30.03.2012 வரை நடைபெறுகிறது. இவ்வாண்டு காயல்பட்டினத்திலிருந்து மொத்தம் 461 மாணவ-மாணவியர் தேர்வெழுதுகின்றனர்.
பள்ளிவாரியாக தேர்வெழுதுவோர் எண்ணிக்கை:
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 75 மாணவர்களும்,
எல்.கே. மேனிலைப்பள்ளியிலிருந்து 92 மாணவர்களும்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 40 மாணவ-மாணவியரும்,
அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 133 மாணவியரும்,
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 98 மாணவியரும்,
சென்ட்ரல் மெட்ரிக் மேனிலைப்பள்ளியிலிருந்து 23 மாணவியரும் என, காயல்பட்டினத்தில் மொத்தம் 6 பள்ளிகளிலிருந்து 461 மாணவ-மாணவியர் இவ்வாண்டு ப்ளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வெழுதுகின்றனர்.
தேர்வு மையங்கள்:
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே. மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவர்கள் எல்.கே. மேனிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வெழுதுகின்றனர்.
அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவியர் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வெழுதுகின்றனர்.
இவ்வாண்டு ப்ளஸ் 2 தேர்வில் மாணவ-மாணவியர் நன்மதிப்பெண்கள் பெற்று சாதனைகள் பல புரிந்திட வாழ்த்திப் பிரார்த்திக்குமாறு, பள்ளிகளின் நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இன்று காலையில் மொழி (தமிழ், அரபி) முதல் தாள் தேர்வு நடைபெற்றது. |