இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞரணி, மாணவரணி, சுதந்திர தொழிலாளர் யூனியன் ஆகிய அணிகளுக்கான தூத்துக்குடி மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் இன்று மாலை 04.30 மணிக்கு காயல்பட்டினம் துளிர் பள்ளி கேளரங்கில் நடைபெறுகிறது.
அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பி.மீராசா தலைமையிலும், மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெறும் இக்கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அணிகளுக்கான மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் தேர்வும் நடைபெறவுள்ளது. கூட்ட நிகழ்வுகள் நிறைவுற்ற பின்னர் மாநில பொதுச்செயலாளருடன் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
கூட்ட ஏற்பாடுகளை, கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர். |