காயல்பட்டினம் சதுக்கைத் தெரு மஹ்பூப் சுப்ஹானீ பெண்கள் தைக்காவில் இயங்கி வரும் அல்மத்ரஸத்துன் நஸூஹிய்யாவில், பெண்களுக்கான திருக்குர்ஆன் மனனப் பிரிவு (ஹிஃப்ழு மத்ரஸா) நடைபெற்று வருகிறது. இம்மத்ரஸாவில், நடப்பாண்டிற்கான திருக்குர்ஆன் மனன வகுப்பிற்கு மாணவியரின் விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்ரஸா சார்பில் அதன் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ, நிர்வாகி ஹாஜி ஏ.டபிள்யு.கிதுர் முஹம்மத் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஓர் ஆண்மகன் கல்வி பயின்றால் அவனுக்கு அது பலன். ஆனால் ஒரு பெண்மகள் கல்வி பயின்றால் அந்தக் குடும்பமே பலன் பெறும். எனவே, உங்களது பெண் மக்களையும் கல்வி கற்கச் செய்யுங்கள். அதிலும், ஹிஃப்ழு எனும் திருக்குர்ஆன் மனனம் செய்ய பயிற்றுவிக்கும் மத்ரஸாக்களுக்கு அனுப்பி வையுங்கள்.
மத்திய காயலில், ஹிஜ்ரீ 1424 ஷஃபான் மாதம் 27ஆம் தேதி முதல் (24.10.2003) கடந்த ஒன்பதாண்டுகளாக சீர் சிறப்புற இயங்கி வரும் அல்மத்ரஸத்துன் நஸூஹிய்யாவில் பயில உங்கள் பெண் மக்களை அனுப்புங்கள் என மகிழ்வுடன் அழைக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |