காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையில், மஹான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவு நாள் கந்தூரி நிகழ்ச்சிகளின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் 07.03.2011 அன்று (நேற்று) நடைபெற்றது. நேற்றிரவு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை அமர்வில் (துஆ மஜ்லிஸ்) திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
மஹான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டின் கந்தூரி நிகழ்ச்சிகள் 24.02.2012 முதல் 08.03.2012 தேதி வரை நடைபெற்றது.
தினமும் அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டதுடன், காலை 07.00 மணிக்கு முஹ்யித்தின் ஆண்டகை அவர்களின் புகழ்பாடும் மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்பட்டது.
27.02.2012 முதல் 06.03.2012 வரை தினமும் இரவு 08.45 மணிக்கு சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.
27.02.2012 திங்கள் பின்னிரவு 08.45 மணிக்கு, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ “நன்னபி நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னய ஹதீஸ் ஒரு பன்முகப் பார்வை” என்ற தலைப்பிலும்,
28.02.2012 செவ்வாய்க்கிழமை பின்னிரவில், மஹ்ழரா பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ, “அருட்திரு ஹதீஸும், ஆத்மீக ஞானமும்” என்ற தலைப்பிலும்,
29.02.2012 புதன்கிழமை பின்னிரவில், மஹ்ழரா பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.காஜா முஹ்யித்தீன் பாக்கவீ, “உயர்திரு ஹதீஸும் உவமை நயமும்” என்ற தலைப்பிலும்,
01.03.2012 வியாழக்கிழமை பின்னிரவில், மஹ்ழரா பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.எஸ்.எம்.எம்.யாஸர் அரஃபாத் மஹ்ழரீ, “அருள்நிறை ஹதீஸும், அறிவியலும்” என்ற தலைப்பிலும்,
02.03.2012 வெள்ளிக்கிழமை பின்னிரவில், மஹ்ழரா பேராசிரியர்களான மவ்லவீ எம்.முஹம்மத் அஷ்ரஃப் அலீ ஃபைஜீ, மவ்லவீ ஹாஃபிழ் ஏ.நாகூர் மீரான் சிராஜீ ஆகியோர், “வளமார் ஹதீஸும், வரலாறும்” என்ற தலைப்பிலும்,
03.03.2012 சனிக்கிழமை பின்னிரவில், மஹ்ழரா பேராசிரியர் மவ்லவீ ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ, “நயமார் ஹதீஸும் நற்பண்புகளும்” என்ற தலைப்பிலும்,
04.03.2012 ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில், மஹ்ழரா பேராசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் என்.ஏ.ஜி.ஷெய்கு இஸ்மாஈல் ஃபைஜீ, மவ்லவீ ஹாஃபிழ் காரீ ஏ.செய்யித் முஹம்மத் மன்பஈ ஆகியோர், “சத்திய ஹதீஸும், சமுதாய இயலும்” என்ற தலைப்பிலும்,
05.03.2012 திங்கட்கிழமை பின்னிரவில், மஹ்ழரா பேராசிரியரும், தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயுமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ, “மாண்புறு ஹதீஸும், மண வாழ்க்கையும்” என்ற தலைப்பிலும் மார்க்க சொற்பொழிவாற்றினர்.
06.03.2012 செவ்வாய்க்கிழமை பின்னிரவில், மஹ்ழரா அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ, “புனித ஹதீஸும் மனித நேயமும்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றியதோடு, “கௌது நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வரலாற்றுச் சரிதம்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்.
07.03.2012 புதன்கிழமை மாலையில் கந்தூரி தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்று மாலை 04.30 மணிக்கு மவ்லித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகைக்குப் பின் திக்ர் மஜ்லிஸும், மவ்லவீ எல்.ஓ.முஹம்மத் அலீ மஹ்ழரீ தலைமையில் நடைபெற்றது.
அன்றிரவு 08.30 மணி முதல் 09.30 மணி வரை துஆ பிரார்த்தனை மஜ்லிஸ் நடைபெற்றது.
மஹ்ழரா அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ, உலக சமாதானம், நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களிலிருந்து பாதுகாப்பு, நோயற்ற வாழ்வு, தொழில் அபிவிருத்தி உள்ளிட்ட நகர மக்களின் பல்வேறு தேவைகளை முன்வைத்து துஆ இறைஞ்ச, குழுமியிருந்த அனைவரும் “ஆமீன்” கூறி பிரார்த்தித்தனர்.
மறுநாள் 08.03.2012 வியாழக்கிழமையன்று (இன்று) காலை ஃபஜ்ர் தொழுகை முடிவுற்றதிலிருந்து 09.00 மணி வரை நேர்ச்சை வினியோகம் நடைபெற்றது.
நிகழ்ச்சிகள் அனைத்திலும், நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். நிறைவு நாள் நிகழ்ச்சிகள் மற்றும் நேர்ச்சை வினியோக நிகழ்வுகளில் வெளியூர்களிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தகவல்:
மஹ்ழரா கந்தூரி கமிட்டி சார்பில்,
ஹாஜி வாவு K.S.முஹம்மத் நாஸர்
மற்றும்
K.M.T.சுலைமான்,
காயல்பட்டினம்.
படங்கள்:
மஹ்மூத் ரஜ்வீ,
சதுக்கைத் தெரு, காயல்பட்டினம். |