காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் மின் கம்பி வடங்கள், விளக்குகள் உள்ளிட்ட மின் பொருட்களை சீர் செய்வதற்காக, ஜெஸ்மின் பாரடைஸ் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.
மருத்துவமனையின் தேவையைக் கேட்டறிந்த ஜெஸ்மின் பாரடைஸ் நிறுவன அதிபர் ஹாஜி ஏ.கே.கலீல், செய்யப்பட வேண்டிய மின் பணிகளுக்காக 06.03.2012 அன்று காலையில், ரூபாய் எட்டாயிரம் நிதியுதவி வழங்கினார்.
தாமாக முன்வந்து செய்த இவ்வுதவிக்காக, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பாவநாசகுமார் அவருக்கு நன்றி தெரிவித்தார். காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஏ.அஜ்வாத் உடனிருந்தார். |