காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில், 06ஆம் வகுப்பு முதல் 09ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர் - ஆசிரியர் கூடட்ம் 08.03.2012 அன்று மாலை 04.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கிராஅத்தைத் தொடர்ந்து, கூட்டத்திற்குத் தலைமை வகித்த பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை தலைமையுரையாற்றினார்.
மாணவர்களின் உடல் நலனில் பெற்றோர்கள் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்ளவதின் அவசியம் குறித்து மருத்துவ மேற்கோள்களுடன் அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார். பள்ளி நிர்வாகம் மாணவர்களின் நலனில் என்றும் ஆர்வமும், அக்கறையும் கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், வருங்காலங்களில் பள்ளி மென்மேலும் பல சாதனைகள் புரிய பெற்றோரும் உறுதுணை புரியய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அவரைத் தொடர்ந்து, பள்ளியின் உதவி தலைமையாசிரியர் டேவிட் செல்லப்பா உரையாற்றினார். தற்போதுள்ள சூழலில் மாணவர்களை நெறிப்படுத்த பெற்றோர்களும், ஆசிரியர்களும் எவ்வாறு முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்பது குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
பின்னர் பெற்றோர்கள் தங்களின் ஆலோசனைகளையும், சந்தேகங்களையும் தெறிவிப்பதற்கு நேரம் வழங்கப்பட்டது. நேரடியாகவும், எழுத்து மூலமாகவும் தங்கள் பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகள் குறித்து அவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு, பள்ளி தாளாளரும், உதவி தலைமையாசிரியரும் தேவையான விளக்கங்களை அளித்தனர்.
மாணவர் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடலாகவே நடைபெற்ற இக்கூட்டம் நன்றியுரையுடன் நிறைவுற்றது.
தகவல்:
அஹ்மத் மீராதம்பி
ஆசிரியர்,
எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம். |