இலங்கை நாட்டிற்கு வருகை தந்த - கேரளா மர்கஸ் அஷ்ஷக்காஃபத்திஸ் ஸுன்னிய்யா கலாபீடத்தின் பொதுச் செயலாளருக்கு, கொழும்புவாழ் காயலர்கள் வரவேற்பளித்துள்ளனர். விபரம் பின்வருமாறு:-
இலங்கை கூட்டுறவு மற்றும் உள்நாட்டு பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூதின் அழைப்பின் பேரில் அன்மையில் இலங்கைக்கு
வருகை தந்த இந்தியா, கேரளா (கோழிக்கோடு) மர்க்கஸ சக்காபத்திஸ் சுன்னியா http://www.markazonline.com அமைப்பின்
பொதுச் செயலாளரும் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வெளிவரும் தினசரியான சிராஜ் டெய்லி பத்திரிகை
ஸ்தாபனத்தின் நிர்வாக இயக்குனருமான பெரியார் அஷ் ஷெய்க் அபூபக்கர் அஹ்மட் தலைமையிலான குழுவினர் இலங்கைப்
பிரதமர் டி.எம். ஜயரத்னவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தனர். இலங்கையில் இஸ்லாமிய கல்வி அபிவிருத்தி
தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
அஷ் ஷெய்க் அபூபக்கர் அஹ்மட் அவர்களின் குழுவினர்கள் இலங்கை வாழ் காயலர் பி.எஸ்.ஏ.ரபீக் அவர்களின் அழைப்பை
ஏற்று அவரின் கொள்ளுப்பிட்டி இல்லத்திற்கு விஜயம் செய்தார்கள். அங்கு மர்க்கஸ் கலாபீடத்தின் விடயங்கள் பற்றி
விளக்கமளித்தார்கள். இதன் போது காயலர்களான பி.ஏ.எம்.பல்லாக் லெப்பை, பி.எம்.ரபீக், தங்கள் நூகு, எஸ்.ஏ.ஜவாஹிர்,
காலிப், எம்.ஐ.நிஜாமுத்தீன், எம்.எஸ்.செய்யது அகமது, எம்.எஸ்.சபீர், புஹாரி ஐயூப், சுலைமான் மற்றும் ஹாங்காங்கில் இருந்து
வருகை தந்த கே.ஏ.ஜெ.மீரா சாகிப், ஜஹீர் (கொழும்பு), இப்திகார் (கொழும்பு) கொழும்பு மாநகர உறுப்பினர் ஆஸாத்சாலி
ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு விருந்தளித்து கௌரவிக்கப்பட்டது.
தகவல் :
BC COMMUNICATIONS
COLOMBO
SRI LANKA.
|