கோமான் நற்பணி மன்றத்தின் நலத்திட்டப் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு, அவ்வமைப்பின் சார்பில் பின்வருமாறு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது:-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
காயல் கோமான் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்களுக்கு எங்களது அன்பான வேண்டுகோள். நமது நற்பணி மன்றத்தின் உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 09.03.2012 அன்று, துபாயில் வைத்து ஜனாப் நாசர் அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
இவற்றில் பல மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கோமான் நற்பணி மன்றத்தின் ஊர்த் தலைவராக ஜனாப் அல்ஹாஜ் என்.எம்.முகம்மது இபுராஹிம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலம் கோமான் நற்பணி மன்றத்தின் வரையறைக்குட்பட்ட எமது உதவியை நாடும் நெஞ்சங்களுக்கு அன்பான வேண்டுகோள். உங்களது மனுக்களை ஜனாப் முகம்மது இபுராஹிம் அவர்களின் மேல்பார்வையில் எங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறோம். அவர்களின் கையெழுத்தோ அல்லது அவரிடம் இருந்து ரப்பர் ஸ்டாம்ப் பெற்றோ எமது அமைப்பிற்கு அனுப்ப வேண்டும் என்றும், அவ்வாறு அனுப்பப்படும் மனுக்களே பரிசீலிக்கப்படும் என்பதை அறியத்தருகிறோம்.
மேலும், வரும் ஏப்ரல் மாத பள்ளித் தேர்வு பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கு ஒரு நற்செய்தி. பள்ளி இறுதித் தேர்வினை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர்களில் அதிக மதிப்பெண் பெறும் நபர்களுக்கு ஊக்குவிக்கும் நோக்கில் பரிசுகள் வழங்கப்படும். இதோடு மார்க்க கல்வி பயிலுவோர்கள், விளையாட்டில் சிறந்து விளங்குவோர்களும் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்பதை அன்புடன் அறியத் தருகிறோம். இது கோமான் நற்பணி மன்றத்தின் வரையரைக்குட்பட்டது.
இன்ஷாஅல்லாஹ் நமது கோமான் தெருவில் மழலையர் பள்ளிக்கூடம் விரைவில் அமைக்கப்படுமு் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.
இப்படிக்கு,
காயல் கோமான் நற்பணி மன்றம்,
துபாய்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஆசிரியர் அப்துல் ரசாக்,
காயல்பட்டினம். |