இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரமொன்றை - பொதுமக்கள் வசதிக்காக காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென காயல்பட்டினம் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற பொதுக்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் 11.03.2012 அன்று காலை 10.30 மணியளவில் ஜனாப் எம்.என்.செய்யது முகியத்தீன் தலைமையில் நடைபெற்றது. சங்க செயலாளர் ரஜ்வி கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
உறுப்பினர்களின் நீண்ட நேர கலந்தாலோசனைக்குப் பின், கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
1. சங்கத்தின் முப்பெரும் விழாவை மிக விரைவில் நடத்துவது...
2. முப்பெரும் விழாவின் ஒரு பகுதியாக மருத்துவ முகாம் ஒன்றை நடத்துவது...
3. சங்கத்திற்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது...
4. இந்த ஆண்டிக்கான உறுப்பினர் சந்தா வசூலை விரைவு படுத்துவது...
5. ஐ.ஓ.பி. வங்கியின் ஏ.டி.எம். இயந்திரம் ஒன்றை மத்திய காயலில் (சதுக்கை தெருவில்) கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் எடுப்பது...
6. ECR எனப்படும் கிழக்கு கடற்கரை சாலையை காயல்பட்டினம் வழியாக கொண்டு வர அனைத்து ஜமாத் - பொதுநல அமைப்புகள் மற்றும் அனைத்து சமுதாய அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி, கருத்தொற்றுமையை ஏற்படுத்தி, அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்பது...
7. பொதுமக்கள் நலன் கருதி பஸ், இரயில் கால அட்டவணையை வெளியிட முயற்சி எடுப்பது...
8. சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் எந்த ஒரு ஆலையும் நமது நகராட்சி எல்லைக்குள் இயங்குவதற்கு இக்கூட்டம் வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவண்
பொது நலன் நாடும்
அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம்
சதுக்கைத்தெரு, காயல்பட்டினம்.
இவ்வாறு அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ரஜ்வி,
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம்,
காயல்பட்டினம்.
தொடர்பு எண்: +91 9629134474 |