காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குட்பட்டு இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் நடப்பு உற்பத்தியைப் பெருக்கவும், புதிய பொருட்களை உற்பத்தி செய்யவும் அரசு அனுமதி கோரப்பட்டுள்ளது.
மக்கள் நலன் கருதி அதற்கு அரசு அனுமதியளிக்கக் கூடாது என மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்துவதற்காக, அண்மையில் துவக்கப்பட்ட காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் - KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - KEPA மூலம், முதற்கட்டமாக பொதுமக்களிடமிருந்து பெருவாரியான அளவில், கையெழுத்துக்களை சேகரித்து, மத்திய - மாநில அரசுகளிடம் சமர்ப்பிக்க, அவ்வமைப்பின் துவக்கக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்த விளக்கமடங்கிய பிரசுரத்தை, கடந்த 09.03.2012 வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின், காயல்பட்டினத்தின் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் ஆகிய 3 ஜும்ஆ பள்ளிகளின் வெளிப்பகுதியில் நின்றவாறு KEPA நிர்வாகிகள் பொதுமக்களிடம் வினியோகித்து, கையெழுத்து சேகரித்தனர். காட்சிகள் பின்வருமாறு:-
பிரசுரத்தின் வாசகங்கள் பின்வருமாறு:-
“DCW உள்ளிட்ட எந்த ஆலையானாலும், அது இயங்குவதிலோ, பல கோடிகள் லாபம் சம்பாதிப்பதிலோ எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை... அதே நேரத்தில், மாசுக்கட்டுப்பாட்டு சட்ட விதிகளை முழுமையாகப் பேணி, பொதுமக்களின் உயிர் - உடல் நலனுக்கு பாதிப்பில்லாத வகையில்தான் அவை செயல்பட வேண்டும்... அதில் குறையிருப்பின், அரசு இயந்திரங்கள் அதனை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்...” என கையெழுத்திட்ட பொதுமக்களில் பலர் தெரிவித்துச் சென்றனர். |