காயல்பட்டினம் கூலக்கடை பஜாரில், எம்.ஓ.ஸ்டோர், பவுஸியா ஸ்டோர் உள்ளிட்ட பலசரக்கு மளிகைக் கடைகளும், காய்கறி கடைகளும் இதர கடைகளும் நிறைந்துள்ள வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி மூலம் கெடு விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து, நகராட்சியால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதைத் தவிர்த்திடும் பொருட்டு, அந்த வீதியிலுள்ள வணிகர்கள் தாமாக முன்வந்து தம் கடைகளுக்கு முன்புள்ள பெயர் பலகைகள், உபரியான படிக்கட்டுகள், நீட்டித்து கட்டப்பட்ட திண்டுகள் என அனைத்தையும் அகற்றும் பணியில் இன்றிரவு சுமார் 08.00 மணி முதல் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
|