காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்று காலை 08.30 மணியளவில் மீண்டும் கனமழை பெய்தது.
நேற்று பெய்த மழை காரணமாக ஏற்கனவே தெருக்களில் தேங்கியிருந்த மழை நீர், இன்று பெய்த மழை காரணமாக அதிமானது.
பழைய சாலைகள் அகற்றப்படாமல் புதிய சாலைகள் - குறிப்பாக புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில், பொதுமக்கள் தம் குடியிருப்புகளுக்குச் செல்லவியலாத அளவுக்கு, சாலையோரங்களிலும், சந்து - பொந்துகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. நகரில் இதமான வானிலை நிலவுகிறது.
காயல்பட்டினம் நகர வானிலைச் செய்திகளை, www.kayalsky.com இணையதளத்தில் உடனுக்குடன் பார்த்தறியலாம். |