காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் 20ஆவது விளையாட்டு விழா, 11.3.2012 அன்று, காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு, மோட்டார் வாகன ஆய்வாளர் எம்.கனகவல்லி தலைமை தாங்கினார். வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அக்கல்லூரியின் உதவி செயலாளர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி தாளாளரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி செயலாளருமான வாவு எம்.எம்.முஃதஸிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். உடற்பயிற்சி ஆசிரியை எம்.மகேஷ்வரி விளையாட்டு அறிக்கையை வாசித்தார். இவ்விழாவில், மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை வனிதா நன்றி கூறினார். |