காயல்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வீசி வருகிறது. அதிகாலையிலேயே உயர்ந்து விடும் வெப்ப நிலை, நண்பகல் - மதிய நேரங்களில் கடுமையாக வாட்டி வருகிறது.
இந்நிலையில், இன்று காலை 08.15 மணி முதல் 08.30 மணி வரை திடீரென கனமழை பெய்தது. எதிர்பாராத நேரத்தில் பெய்த இம்மழை, நகரை நன்கு குளிர்வித்துள்ளது.
சில மணி நேர இடைவெளிக்குப் பின், மீண்டும் கனமழை தொடர்ந்தது. விட்டு விட்டுப் பெய்த இம்மழை காரணமாக, நகரின் தாழ்வான வீதிகளெங்கும் மழை நீர் தேங்கி காணப்படுகிறது. நகரில் வெயிலுடன், இதமான வானிலை நிலவுகிறது.
மழை நீர்த்தேக்க காட்சிகள் பின்வருமாறு:-
காயல்பட்டினம் நகர வானிலைச் செய்திகளை, www.kayalsky.com இணையதளத்தில் உடனுக்குடன் பார்த்தறியலாம். |