இந்திய யூனியன் முஸ்லிம் லீக்மார்ச் 10ஆம் தேதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிறுவப்பட்ட நாளாகும். இதனை நினைவுகூரும் வகையில், அந்நாளில் முஸ்லிம் லீக் சார்பில் பிறைக்கொடி ஏற்றப்படுவது வழமை. அந்த அடிப்படையில், காயல்பட்டினத்தில் 7 இடங்களில் பிறைக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில், கட்சியின் சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில அமைப்பாளர் கே.எம்.நிஜாமுத்தீன் பிறைக்கொடி ஏற்றினார்.
சூயஸ் முனையிலுள்ள காயல் பிறைக்கொடியான் நினைவு கொடிக்கம்பத்தில், இளைஞரணி மாநில அமைப்பாளர் பள்ளப்பட்டி எம்.கே.முஹம்மத் யூனுஸ், அஞ்சலகம் அருகில் இளைஞரணி மாநில இணைச் செயலாளர் தென்காசி முஹம்மத் அலீ, பிரதான வீதி - பெரிய தெரு சந்திப்பில் தென்காசி நகர துணைத்தலைவர் முஹம்மத் முஸ்தஃபா, நெய்னார் தெருவில், மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் அருகில், நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், குலாம் ஸாஹிப் தம்பி தோட்டம் பகுதியில், நகர துணைத்தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் ஆகியோர் பிறைக்கொடி ஏற்றினர்.
கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம்.எச்.அப்துல் வாஹித், மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, நகர துணைச் செயலாளர்களான ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் மற்றும் கட்சியின் மாவட்ட - நகர நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். |