துபாய் காயல் நல மன்றத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டம் மார்ச் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. அம்மன்றம் சார்பாக அது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
அருளாளன் அன்புடையோன் இறையேகன் திருப்பெயரால்...
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் துபாய் காயல் நல மன்றத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டம் வழமை போல் வெகு விமரிசையாக மன்றத்தின் தலைவர் ஹாஜி ஆடிட்டர் JSA புஹாரி அவர்கள் "வில்லா" வில் வைத்து மார்ச் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் ஆரம்பமாகியது.
அன்று மிகவும் ரம்மியமான தட்பவெப்பநிலை நிலவியதால் கூட்டத்தை ஒரு மாறுதலுக்காக தலைவர் அவர்கள் வில்லாவில் அமைந்துள்ள புல்வெளியில் (LAWN ) நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கூட்டத்திற்கு ஜனாப் முனவ்வர் சக்காஃப் தலைமையேற்று சிறப்பித்துத்தர ஜனாப் நூஹு சாஹிப் அவர்கள் கிராத்துடன் கூட்டம் துவங்கியது.
கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்களை வரவேற்ற சக்கா ஃப், மன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஒவ்வொரு துறைக்கும் தனித் தனியாக குழு அமைத்து செயல்படுவது மிகவும் தரமான முறையில் உதவிட எதுவாய் இருப்பதை பாராட்டினார்.
சென்ற மாத கூட்டத்தின் தீர்மானங்கள் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. மன்றத்தின் பொதுக்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 6 ஆம் தேதி நடாத்துவது என்றும், இந்த கூட்டம் எந்த வித அஜண்டாவும் இல்லாத காயலர்கள் ஓன்று கூடல் என்பதால் இந்த முறை பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த துபாய் கிரீக்கில் அமைந்துள்ள கிரீக் பார்க்
(CREEK PARK) -ல் வைத்து நடத்தவும் தீர்மானிக்கப்பட்டு, இதற்கென தனி குழு ஒன்றும் ஜனாப் செய்யத் இப்ராஹீம் தலைமையில் அமைக்கப்பெற்று முறையான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
2 . மைக்ரோ காயல் சம்பந்தமாக அறிக்கை இந்த மாதம் சமர்ப்பிக்கபடாததால் ஜனாப் முஹம்மது அலி அவர்களை அடுத்த மாதம் சமர்ப்பிக்கும்படி வேண்டிக்கொண்டது.
3 . சிங்கை காயல் நலமன்றத்தினருடன் தொடர்பு கொண்டு நமது நகருக்கு இங்கிருந்து உறுப்பினர்கள் பயன் படுத்திய நல்ல நிலையில் உள்ள ஆடை அணிமணிகளை உறுப்பினர்களிடம் இருந்து சேகரித்து தாயகத்திற்கு அனுப்பவும், இந்த துணிகள் சேகரிப்பு அறிவிப்பை எதிர்வரும் பொதுக்குழு அறிவிப்போடு உறுப்பினர்களுக்கு அறிவிக்கவும் மன்றத்தின் துணை தலைவர் ஜனாப் சாளை ஸலீம் மற்றும் சாளை S L காஜா அவர்களையும் கேட்டுகொண்டது.
4. பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்களின் தொடர்பு முகவரிகளை சரியாக சேகரித்து மன்றத்தின் உறுப்பினர்களின் முகவரிகளை சரிவர புதுப்பிக்கவும் ஜனாப் நிஜாம் அவர்களை கேட்டுக்கொண்டது.
சகோதரர் ஒருவரின் வாழ்க்கையை தனது வழிகாட்டுதலாலும், அல்லாஹ்வின் கிருபையாலும் ஜனாப் J S A புஹாரி அவர்கள் இஸ்லாத்தின்பால் இணையச்செய்தார். அந்த சகோதர் கேரளாவை சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்களை இந்த கூட்டம் சிறப்பு விருந்தினராய் கௌரவப்படுத்தியது.
அப்துல் ரஹ்மான் அவர்கள் பேசுகையில் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக " நான் இந்த உலகில் இனி தனிமையில் இல்லை, என்னை காப்பதற்கு வல்ல அல்லாஹ்வும் என் சகோதரர்களான நீங்களும் உள்ளீர்கள் என்பதில் பெரும் சந்தோசம் அடைகிறேன். இன்று நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன் . வல்ல அல்லாஹ் உங்களனைவரையும் என்றும் சந்தோஷமாக்கி வைக்க பிரார்த்திப்பதாகவும்" நா தழுக்கக் கூறினார். கூடிஇருந்தோர் அனைவரும் அவரை ஆரத்தழுவி வரவேற்று "அல்லாஹ் அக்பர்" என்று கோஷமிட்டனர்.
அதேநேரத்தில், சூடான் நாட்டை சேர்ந்த ஹசன் ஜாபர் அவர்களும் தனது புதல்வருடன் விஜயம் செய்து சகோ அப்துல் ரஹ்மான் அவர்களை வாழ்த்தியதோடு நம் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்து பாராட்டினார்கள்.
நேரம் மிகுதியாக ஆகி விட்டதால், மற்ற விஷயங்களை அடுத்த மாதம் விவாதிப்பது என்று கருதி, சிற்றுண்டி பரிமாறப்பட்டு, துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.
அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை ஷேய்க் ஸலீம்,
துணைத் தலைவர் - துபாய் காயல் நல மன்றம்.
புகைப்படங்கள்:
நிஜாம், அமீரகம்.
[செய்தி திருத்தப்பட்டது @ 09:45/11.03.2012] |