| |
செய்தி எண் (ID #) 8124 | | | சனி, மார்ச் 10, 2012 | மார்ச் 13 அன்று, உடல் ஊனமுற்றோருக்கான பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்! இளைஞர் ஐக்கிய முன்னணி, காக்கும் கரங்கள் இணைந்தேற்பாடு!! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 2202 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
உடல் ஊனமுற்றோருக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF), காக்கும் கரங்கள் அமைப்புகளின் இணைந்தேற்பாட்டில், இம்மாதம் 13ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை நடைபெறுகிறது.
SCAD தொண்டு நிறுவனம் நடத்தும் இம்முகாம் குறித்து முகாம் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
உடல் ஊனமுற்றோருக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF), காக்கும் கரங்கள் அமைப்புகளின் இணைந்தேற்பாட்டில், இம்மாதம் 13ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை, இன்ஷாஅல்லாஹ் நடைபெறுகிறது.
பயன்கள்:-
01. ஊனமுற்றோருக்கான தேசிய அடையாள அட்டை பெற ஏற்பாடு செய்தல்
02. அரசு மாதாந்திர உதவி தொகை பெற ஏற்பாடு செய்தல்
03. தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குதல்
04. தேவைப்படுபவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்குதல்
05. தேவைப்படுபவர்களுக்கு வீல் சேர் வழங்குதல்
06. தேவைப்படுபவர்களுக்கு காது ஒளி கருவி வழங்குதல்
07. ஊனமுற்ற படிக்கும் மாணவர்களுக்கு மோட்டார் வாகனம் வழங்குதல்
08. தேவைப்படுபவர்களுக்கு செயற்கை கால் வழங்க ஏற்பாடு செய்தல்
09. கண் தெரியாதவர்களுக்கு கருப்பு கண்ணாடி ஊன்றுகோல், பிரைலர் கடிகாரம் வழங்க ஏற்பாடு செய்தல்
10. அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தல்
11. முட நீக்கியல் பயிற்சி, பேச்சு பயிற்சிகள் சொல்லி தரப்படும்.
12. குழந்தைகளுக்கு தசைப் பயிற்சி ஏற்பாடு செய்தல்
13. குழந்தைகளுக்கு அன்றாட பழக்க வழக்கங்கள் கற்றுத் தரப்படும்.
தொடர்புக்கு:-
M.AK ஜெய்னுல் ஆப்தீன்
தலைவர் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்
செல்: +91 984 2365 912.
M. செய்யது முஹம்மது புஹாரி
செல்: +91 994 2132 904
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|