காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்திற்கருகில் அடங்கியுள்ள மஹான் ஃபழ்லுல்லாஹ் ஸாஹிப் ஈக்கியப்பா அவர்களின் நினைவு நாள் கந்தூரி நிகழ்ச்சி, 09.03.2012 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ தலைமையில் கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு, மஹான் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
அன்று மாலை 04.30 மணியளவில், மஹான் அவர்களின் பெயரில் மர்ஹூம் மவ்லவீ அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் ‘முத்துச்சுடர்‘ எஸ்.கே.எம்.நூஹுத்தம்பி ஆலிம் ஜுமானீ அவர்களால் கோர்வை செய்யப்பட்ட மவ்லித், குருவித்துறைப்பள்ளியின் முன்னாள் இமாம் ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் தலைமையில் ஓதப்பட்டது.
மஃரிப் தொழுகைக்குப் பின், டி.எம்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் பேஷ் இமாம் தலைமையில் ராத்திபத்துல் அஹ்மதிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது. ஹாஃபிழ் எஸ்.எச்.ஷேக் தாவூத் கிராஅத் ஓதினார்.
பின்னர், மார்க்க சொற்பொழிவு மற்றும் மஹான் அவர்களின் வாழ்க்கைச் சரித உரையை, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ நிகழ்த்தினார்.
நிறைவாக, ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் நன்றி கூற, காயல்பட்டினம் பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் எஸ்.எச்.ஷெய்கு அலீ மவ்லானா துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. நிகழ்ச்சிகளில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிடவசதி செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஹாஜி எஸ்.எம்.கபீர் தலைமையில், ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார், ஹாஜி எம்.கே.செய்யித் முஹம்மத், ஹாஜி எஸ்.எம்.எஸ்.முஹம்மத் நூஹ், ஹாஜி எம்.ஏ.அஹ்மத் லெப்பை, ஹாஜி எஸ்.எஸ்.எம்.செய்யித் முஹம்மத் ஸாஹிப், ஹாஜி எஸ்.எம்.செய்யித் இப்றாஹீம், எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் ஆகிய கந்தூரி கமிட்டியினர் செய்திருந்தனர். |