காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்று காலை 07.40 மணி முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
ஏற்கனவே இருமுறை பெய்த மழை காரணமாக ஏற்கனவே தெருக்களில் தேங்கியிருந்த மழை நீர், இன்று பெய்த மழை காரணமாக அதிமானது.
பழைய சாலைகள் அகற்றப்படாமல் புதிய சாலைகள் - குறிப்பாக புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில், பொதுமக்கள் தம் குடியிருப்புகளுக்குச் செல்லவியலாத அளவுக்கு, சாலையோரங்களிலும், சந்து - பொந்துகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. பல சாலைகள் மழை பொழிவால் சிதைவுற்று அலங்கோலமாகி வருகிறது.
நகரில் இதமான வானிலை நிலவுகிறது. மழை தொடர்ந்து நீடிக்கிறது.
காயல்பட்டினம் நகர வானிலைச் செய்திகளை, www.kayalsky.com இணையதளத்தில் உடனுக்குடன் பார்த்தறியலாம். |