தூத்துக்குடி மாவட்டத்தில், லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் புதிய டாக்டைம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பிஎஸ்என்எல் தூத்துக்குடி பொது மேலாளர் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியாவில் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் லேண்ட் லைன் இணைப்புகளுக்கு மாதம் முழுவதும் இலவசமாக பேச ரூ.450 மதிப்பில் யுஎல்-450 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் லேண்ட் லைன் மற்றும் பிஎஸ்என்எல் மொபைல் எண்களுக்கு மாதம் முழுவதும் இலவசமாக பேச ரூ.600 மதிப்பில் யுஎல்-600 என்ற திட்டமும் துவக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் வசதியுடன் கூடிய லேண்ட்லைன் இணைப்புகளிலும் இந்த இரு காம்போ பிளானை பெற மாதம் கூடுதலாக ரூ.325 செலுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் லேண்ட்லைன்களுக்கு மாதம் முழுவதும் இலவசமாக பேசலாம்.
மேலும் ரூ.475 செலுத்தினால் இந்தியாவில் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் லேண்ட் லைன் மற்றும் பிஎஸ்என்எல் மொபைல் எண்களுக்கு மாதம் முழுவதும் இலவசமாக பேசலாம்.
இத்திட்டங்களை பெற விருப்பமுள்ளவர்கள் 0461-2333555 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம் மற்றும் பிளான் மாற்றங்களை செய்து கொள்ளலாம் என பிஎஸ்என்எல் தூத்துக்குடி பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
3. Re:லேண்ட்லைன்களுக்கு புதிய ட... posted byHaddadh (Thrissur)[17 March 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 17714
சீரியலை கண்டு காலத்தை வீணடிக்கும் சமுதய மக்களுக்கு, போதாது என்று மீதமுள்ள நேரத்தை இப்படி பேசி செலவழியுங்கள் என்று சொல்லாமல் சொல்லுகின்றது . நம்மலுடைய மூளைகளுக்கு நல்ல சிந்தனை வரவிடாமல் பல offer கலை தருகிறார்கள் கவனம்........................
இவைகளை நம்பி காலத்தை வீனடிக்கதீர்கள்
இவைகளை தள்ளிவிட்டு தீன்படி வாழ்வோம்
4. Re:லேண்ட்லைன்களுக்கு புதிய ட... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[17 March 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17718
மொபைல் வந்த பின்பு, லேண்ட்லைன்களை அதிகம் மக்கள் விரும்புவது இல்லை. பலரும் லேண்ட்லைனை சரண்டர் பண்ணிவிடுகிறார்கள். இதை தடுக்கத்தான் இந்த திட்டம் போல.
சகோ. ஹத்தாத் அவர்களே, உங்கள் கருத்து சரிதான்... சும்மாவே பொழுதன்னைக்கும் போன் பிஸியாகவே இருக்கின்றது..இனி...
அப்புறம், சீரியலை கண்டு காலத்தை வீணடிக்கும் காலம் எல்லாம் மாறிவிட்டன, அம்மாவின் புண்ணியத்தால் (தொடர் மின்வெட்டு காரணமாக) சீரியல் மோகம் குறைந்து, சரியான நேரத்தில் வீட்டில் சாப்பாடு கிடைக்கிறதாம், சரியாக முகம் கொடுத்து பேசுகிறார்களாம், இரவில் சரியான நேரத்துக்கு தூங்க செல்லுகிறார்கலாம்... இப்படி பல நன்மைகள் கிடைத்தமைக்கு அம்மா-விற்கு நன்றி சொல்லலாம்ல..!
5. Too late and too little. posted byAbdul Wahid S (kayalpatnam)[17 March 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 17732
Reliance has already introduced a similar plan more than a year ago in our town. BSNL only wants to retain its customers many of whom already surrender their landlines. It shows the inefficiency of government (Telecom) department. Too late and too little.
Moreover there are plenty of Brandband applications waitlisted for more than 3 months by our BSNL office. The cited reason for the delay . "Non-availability of Modem". Just like TNEB running out of electricity meters.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross