காயல்பட்டினம் காயிதேமில்லத் நகரில் - கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்திற்குத் தென்புறத்திலமைந்துள்ளது பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளிவாசல். 07.03.2011 அன்று திறப்பு விழா கண்ட இப்பள்ளியில், மஹான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு, கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
நடப்பாண்டு நிகழ்ச்சிகள் 18.03.2012 அன்று (நேற்று) மாலை முதல் இரவு வரை நடைபெற்றது. மாலை 04.30 மணிக்கு மவ்லித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகைக்குப் பின் திக்ர் மஜ்லிஸும் நடைபெற்றது.
இஷாவுக்குப் பின், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ மார்க்க சொற்பொழிவாற்றினார்.
பள்ளியின் இமாம் ஹாஃபிழ் ஷெய்கு அலீ மவ்லானா துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. நிகழ்வுகளனைத்திலும், நகரின் பல பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பள்ளி நிர்வாகிகளான ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், துணைத்தலைவர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, செயலாளர் ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல், பொருளாளர் கே.அப்துர்ரஹ்மான் மற்றும் கோமான் மீரான் உள்ளிட்டோர் செய்திருந்தனர். |