காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில், கால்நடை மருத்துவமனைக்கு வடபுறத்தில், சாலையோரத்தில் அமைந்துள்ளது இக்கட்டிடம்.
பாவலர் பூங்கா
மகாத்மா காந்தி
நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு,
தமிழ்நாடு அரசு மாண்புமிகு அமைச்சர்
திரு.என்.வி.நடராசன் அவர்களால்
திறந்து வைக்கப்பட்டது.
பாவலர் எஸ்.எஸ்.அப்துல் காதர் (தலைவர்)
ஏ.எஸ்.டி.எம்.பாண்டியன் (நிர்வாக அதிகாரி)
பேரூராட்சி மன்றம்,
காயல்பட்டணம்.
26.4.1970
என இக்கட்டிடத்தில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் வாசகங்கள் காணப்படுகிறது.
தற்போது இக்கட்டிடம் “மக்கள் நடமாட்டமுள்ள நேரங்களில்” எந்த செயல்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படுவதில்லை. எனினும், அக்கம்பக்கத்திலுள்ள சிலர் கட்டிடத்தின் “ஈரப்பதம்” கெட்டு விடாதிருக்க (?) தினமும் “பொதுச்சேவை” (?) செய்து பாதுகாத்து வருகின்றனர்.
இதுபோன்ற செயல்பாடற்ற கட்டிடங்களை ஒன்று செயல்படச் செய்யவோ அல்லது இடித்தகற்றி அப்புறப்படுத்தவோ செய்தால், சமூக விரோத செயல்களின் கூடாரமாக அவை மாறுவதைத் தவிர்த்திட இயலும்.
|