கர்நாடக மாநிலம் - பெங்களூரு காயல் நல மன்றத்தின் சார்பில், "Key to attain / sustain get the jobs" என்ற தலைப்பில், வேலைவாய்ப்பு பயிற்சி முகாம், இன்று காலை 10.30 மணி முதல், நண்பகல் 01.30 மணி வரை, காயல்பட்டினம் ஃபாயிஸீன் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
காயல்பட்டினம் - ஆறுமுகநேரி (கே.ஏ.) மேனிலைப்பள்ளியின் தலைவர் நாவலர் ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் வெள்ளி முஹம்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். முன்னிலை வகித்த லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் வரவேற்புரையாற்றினார். பெங்களூரு காயல் நல மன்றத்தின் சார்பில், முகாம் ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் அப்துல்லாஹ் முஹாஜிர் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்திப் பேசினார்.
இம்முகாமில், திருச்சியைச் சேர்ந்த ஆங்கில மொழியியல் வல்லுனர் பஷீர் அஹ்மத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்.
வேலைவாய்ப்புகளைப் பெற்றிடுவதற்கு ஆங்கில மொழியின் அவசியம் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
இம்முகாமில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
முகாம் ஏற்பாடுகளை, ஹாஜி ஏ.ஆர்.இக்பால் தலைமையில், பெங்களூரு காயல் நல மன்றத்தைச் சேர்ந்த ஜாஹிர் ஹுஸைன் (ஐபிஎம்), ஷேக்னா லெப்பை மற்றும் பலர் செய்திருந்தனர். |