Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:41:47 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8163
#KOTW8163
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 17, 2012
சஊதியில் நடைபெற்ற மாரத்தான் நீள்ஓட்டப் போட்டியில் காயலர்கள் பங்கேற்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4966 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா அல்ஃகபர் சதர்ன் கார்னிச்சில், சஊதி அராம்கோ நிறுவனத்தின் சார்பில், 17ஆம் ஆண்டு மாரத்தான் - நீள் ஓட்டப் போட்டி 16.03.2012 அன்று நடைபெற்றது.



இப்போட்டியில், தம்மாம் காயல் நற்பணி மன்ற உறுப்பினர்களும், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க (USC) வீரர்களுமான எஸ்.எஸ்.எச்.அப்துல் அஜீஸ், கே.எம்.சாஹிப் நவாஸ், பி.ஏ.முத்துவாப்பா, ஜே.அபுல் காசிம், செய்யது முஹம்மது ஆகியோர் கலந்துகொண்டனர்.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இப்போட்டியில், 5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பந்தய தூரத்தை - விடாது வீசிய மணல் காற்றையும் பொருட்படுத்தாமல் பங்குபெற்ற காயலர் அனைவரும் குறித்த நேரத்தில் கடந்து, சவூதி அராம்கோ நிறுவனத்தால் வழங்கப்பட்ட பதக்கத்தைப் பெற்றனர்.



மேலும் இந்த போட்டியில் பங்குப்பெற்ற எஸ்.எஸ்.எச்.அப்துல் அஜீஸ், அவரது நிறுவனத்தின் (PAN GULF) சார்பில் ஓடியவர்களில் மூன்றாவதாக வந்து 1500 ரியால் பரிசுத் தொகையைத் தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் பங்கேற்ற அனைத்து காயலர்களையும், தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் மற்றும் உறுப்பினர்கள் பலரும் பாராட்டினர்.

இப்போட்டியில் பங்கேற்ற காயலர்களுள் சிலர், கடந்த 10.03.2011 அன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியிலும் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
B.A.முத்துவாப்பா,
தம்மாம், சஊதி அரபிய்யா.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:சஊதியில் நடைபெற்ற மாரத்தா...
posted by AbdulKader Thaikasahib MSS (Riyadh, KSA) [17 March 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17716

நண்பர்கள் எஸ்.எஸ்.எச்.அப்துல் அஜீஸ், கே.எம்.சாஹிப் நவாஸ், பி.ஏ.முத்துவாப்பா, ஜே.அபுல் காசிம், செய்யது முஹம்மது ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பைவ் மென் ஆர்மி
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [17 March 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17719

பாராட்டுக்கள்..

எங்கு சென்றாலும் நம் காயல் சகோதரர்கள், அங்கு உள்ள நிகழ்வுகளில் (குறிப்பாக விளையாட்டு நிகழ்வுகள், சமூக சேவைகள்) பங்கு பெற்று சாதனை புரிவதை நினைத்து மிக்க சந்தோசம்... தொடரட்டும் தங்களின் சாதனைகள்.

குறிப்பாக, சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் பல வருடங்களாக இந்த மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும், மெடல்களும் வாங்கிவருவதை பல செய்திகளில் அறிந்தும், பார்த்தும் பூரிப்பு அடைந்தோம்.. மீண்டும் வாழ்த்துக்கள் உங்கள் அனைவர்களுக்கும்..

இவர்களை ஊக்குவித்துக்கொண்டு இருக்கும் தமாம் காயல் நற்பணி மன்ற தலைவர், மருத்துவர் இத்ரீஸ் அவர்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது.. ஸ்பெஷல் தேங்க்ஸ் டாக்டர்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:சஊதியில் நடைபெற்ற மாரத்தா...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [17 March 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17720

வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் .

நம் காயல் நகர கண்மணிகள் உலகில் எங்கு வேலை செய்தாலும், நம் காயல் நகர மண்ணிற்கு பெருமை தேடி தரும் வகையில் வெற்றிகளை பெற்று தர எடுக்கும் முயற்சிகளை நாம் நிச்சயம் பாராட்ட கடமை பட்டு உள்ளோம் .

வல்ல நாயன் நம் காயல் நகர மக்கள் எடுக்கும் எல்லா நல்ல முயர்சிகளிலும் வெற்றிகலை தருவனகாக . ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:சஊதியில் நடைபெற்ற மாரத்தா...
posted by siddiq (chennai) [17 March 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17721

முத்துவாப்பா T shirt la நல்லா தண்ணி ஊத்திகிரா போல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:சஊதியில் நடைபெற்ற மாரத்தா...
posted by S.A.Muhammad Ali (Dubai) [17 March 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17723

வாழ்த்துக்கள்.

1500 ரியால் பரிசு வாங்கிய azeez க்கும் மற்ற நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். முத்துவாப்பா 5km தூரத்தை முழுவதுமாக ஓடி இருப்பானா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. சந்தடி சாக்கில் இடையில் பூந்து இருப்பானோ? நிறைய தண்ணீர் சட்டையில் ஊற்றி படம் வேற காட்டுறான். anyway congrats to all of you.
-------------------------------------------
மாரத்தான் ஓட்டத்தின் வரலாறு
--------------------------------------------
கிரீஸ் நாட்டில் உள்ள மாரத்தான் என்ற இடத்திலிருந்து தொடங்கியதால் இந்த ஓட்டத்திற்கு இப்பெயர் வந்தது. மாரத்தானின் தொடக்க வரலாறு சுவாரசியமானது. கி.மு.490ல் இது தொடங்கியது. பெர்சிய சக்ரவர்த்தி டேரியசின் படையெடுப்பைத் தோற்கடிக்க, ராணுவ உதவியை வேண்டி, 48 மணி நேரம் இடைவிடாது, ஏதென்ஸ் நகரிலிருந்து ஸ்பார்ட்டா நகருக்கு - மூச்சுப் பிடிக்க ஓரே ஓட்டமாக ஓடினான் - பிடிபிடிஸ் என்ற கிரேக்க வீரன். காடு, மலை, நதியெல்லாம் கடந்து ஓடினான் இவன்.

மாரத்தான் என்ற இடத்தில் பின்பு டேரியஸை எதிர்த்து சண்டையும் போட்டு, மீண்டும் ஏதென்சுக்கே ஓடினான் - வெற்றிச் செய்தியைக் கூற. இது 24 மைல் தூரம். ஓட்டமாக ஓடி, “மகிழ்ச்சியான செய்தி, தோழர்களே! நாம் வென்றோம்!” என்று கூறி, மயங்கி விழுந்து, உயிர் துறந்தான். அவனது நினைவாகத்தான் மாரத்தான் ஓட்டம் நடைபெற ஆரம்பித்தது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:சஊதியில் நடைபெற்ற மாரத்தா...
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (JEDDAH -K.S.A.) [17 March 2012]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17724

போட்டியில் கலந்து கொண்ட அணைத்து காயல் வீரர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்...

தம்பி முத்துவாப்பா தங்கள் ஐம்பது கிலோ அரிசி மூட்டையை முன்பக்கம் எப்படி தூக்கி கொண்டு சவுதி ரோட்டில் ஓடினீர்கள் .....விளக்கம் தரவும்... பதில் கமென்ட் கொஞ்சம் காரம் இல்லாமல் பதிவு செய்யவும் .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:சஊதியில் நடைபெற்ற மாரத்தா...
posted by முத்துவாப்பா.... (AL KHOBAR) [17 March 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17729

என்னடா நம்ம தேரை இன்னும் யாரும் இழுத்து ரோட்டுல விடலயேனு நினைச்சேன் . நினைச்ச மாதிரி இழுத்துவிட்டுடாங்க ... அப்புறம் நம்ம ஹபீப் காக்கா விளக்கம் வேற கேட்டிருக்காங்க ... விளக்கம்தானே சொல்லிட்டா போச்சு ....

முதலில் என்னை பற்றி ஒரு சிறிய தன்னிலை அறிமுகம் - நான் என்னுடைய பள்ளி பருவத்திலிருந்தே கால் பந்தை முழு மூச்சாக கொண்டவன் . ஆதித்தனார் கல்லூரி அணிக்காக மூன்று ஆண்டுகள் விளையாடினேன் . அப்புறம் நமதூர் அணிக்காக மூன்று ஆண்டுகள் ஆல் இந்தியா கோப்பைக்காக விளையாடியுள்ளேன் . இதை எல்லாம் என் பெருமைக்காக சொல்லவில்லை விளக்கம் கேட்டதால் சொல்கின்றேன் .

அப்புறம் கடந்த ஆண்டு விடுமுறையில் ஊரில் கால்பந்து ஆடும் பொழுது நடந்த விபத்தில் எனது முட்டில் சவ்வு விலகியதால் என்னால் அதன் பிறகு கால்பந்து ஆட முடியவில்லை . அதனால் உடம்பு சற்று...... இல்லை இல்லை அதிகமாகவே ஏறி விட்டது .

இந்த மராத்தான் போட்டி கிடைக்கும் அணைத்து நிதியும் மனநலம் குன்றிய குழந்தைக்கு செல்கின்றது . நான் இந்த போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் என்னால் அந்த குழந்தைகளுக்கு 50 ரியால் கிடைக்கும். நான் இந்த 5 கிலோ மீட்டர் தூரத்தை ஓடியும் ,கொஞ்சம் நடந்தும்தான் முடித்தேன்.

நாம் ஒரு போட்டியில் கலந்து கொள்வதே நாம் பெரும் முதல் வெற்றி என்ற எங்கள் கல்லூரி கால்பந்து கோச் கூறியதை இத்தருணத்தில் எண்ணி பார்க்கின்றேன். விளக்கம் போதும் என்று நினைக்கின்றேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:சஊதியில் நடைபெற்ற மாரத்தா...
posted by mohamed sirajudeen (Singapore ) [17 March 2012]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 17730

பதக்கம் பெற்ற அனைத்து நண்பர்கள்கும் ....வாழ்த்துக்கள் ........வாழ்த்துக்கள்........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:சஊதியில் நடைபெற்ற மாரத்தா...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [17 March 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17731

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது அன்பு சகோதர்கள் யாவர்களுக்கும் எங்கள் மனமார நல் வாழ்துக்கள் .இது போன்று நீங்கள் பல வெற்றிகளை பெற துவா கேட்கிறோம்.

மாரத்தான் நீள் ஓட்டப் பந்தயம் நடை பெற்ற அன்று நானும் சவுதி அல் - கோபரில்தான் இருந்து நேரில் கண்டு கழித்தேன். சூப்பராக இருந்தது .சவுதி அரசாங்கம் மக்களுக்கு நல்ல பாதுகாப்பும் & நல்ல உற்சாகம் படுத்தியது. வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:சஊதியில் நடைபெற்ற மாரத்தா...
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (JEDDAH - K.S.A.habeeb3p@yahoo.com) [18 March 2012]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17734

தம்பி முத்து வாப்பா... விளக்கத்திற்கு மிக்க நன்றி...

வாழ்த்துக்கள் முத்து வாப்பா, உங்கள் விளையாட்டு சேவை தொடரட்டும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:வாழ்த்துக்கள் ..
posted by masood (calicut) [18 March 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 17736

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற காயலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:சஊதியில் நடைபெற்ற மாரத்தா...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [18 March 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17737

சகோ. மசூத் அவர்களே,

மகனின் போட்டோவை பார்த்ததும் கமெண்ட்ஸ் பறந்து வருதே... கலக்கல் தான்.!! ஊக்கம் கொடுத்த உங்களையும் பாராட்டுவோம்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:சஊதியில் நடைபெற்ற மாரத்தா...
posted by kithuru mohamed abbbas (Dammam) [18 March 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17739

அஸ்ஸலாமு அழைக்கும் சவூதி அரேபியாவில் மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெற்ற நமது ஊர் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. என் பாச மிகு தம்பி அஜிஸ் , அன்பு முத்துவாப்பா மற்றும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ...
posted by சட்னி .செய்யது மீரான் .. (ஜித்தா....சவுதி அரேபியா ) [18 March 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17740

அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த இனிய நிகழ்வில் வருடம் தோறும் தவறாது கலந்து கொள்வதுடன் சக காயல் நண்பர்களையும் அழைத்து வந்து ஊக்குவித்து உற்சாக படுத்தியும் பதக்கமும், பண முடிப்பும் பெற்ற என் பாச மிகு தம்பி அஜிஸ் , அன்பு முத்துவாப்பா மற்றும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ...

இங்கு ஜித்தாவில் பல ஆண்டு காலமாக இருந்தும் இது வரை எங்களால் பார்க்க இயன்றும் முடியாத?? ஹபீப் முஹம்மது நிசார் காக்கா அவர்களே உங்களை காயலர்கள் நாங்கள் பார்ப்பது எந்நாளோ ???

மாரத்தான் போட்டியின் வரலாற்றினை பதிவு செய்து எங்களுக்கு எல்லாம் அறிய தந்த நல்ல உள்ளத்திற்கு நன்றி ..

என்றும் மாறா அன்புடன்
சட்னி .செய்யது மீரான் ....050 159 2134
ஜித்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved