காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 33ஆவது ஆண்டு விழா, 10.03.2012 அன்று, பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.
ஏ.எல்.பத்தூல், ஆர்.எஸ்.ராழியா, ஹாஜ்ஜா எம்.என்.சுலைஹா, எம்.கே.எஸ்.கிழுறு ஃபாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்த இவ்விழாவில், காயல்பட்டினம் ரஃப்யாஸ் ரோஸரி பாலர் பள்ளியின் இயக்குநர் ஐ.ஆபிதா ஷேக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதோடு, மாணவ-மாணவியருக்கு கல்விப் பரிசுகள் மற்றும் போட்டிகளில் வென்றோருக்கான பரிசுகளையும் வழங்கினார்.
மாலை 06.00 மணியளவில், பள்ளி மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை பள்ளியின் துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான் தலைமையில், மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் டி.ஸ்டீஃபன், துவக்கப்பள்ளி தலைமையாசிரியை சாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
பள்ளியின் முன்னாள் மாணவர்களும், ஹாங்காங் ஈஸி எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் அதிபர்களுமான எச்.புகாரீ, எம்.என்.காமில் ஆகியோர் இவ்விழாவிற்கு முழு அனுசரனையளித்திருந்தனர்.
தகவல்:
M.ஜஹாங்கீர்மூலமாக,
K.M.T.சுலைமான்,
துணைச் செயலாளர்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி,
காயல்பட்டினம்.
[கூடுதலாக ஒரு படம் இணைக்கப்பட்டது @ 14:03/17.03.2012] |