காயாமொழி ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து, காயல்பட்டினம் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் நடத்தும் - 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான - இரத்தத்தில் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் இன்று 17.03.2012 சனிக்கிழமை காலை 11.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இம்முகாமில், காயாமொழி ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஆய்வக நிபுணர் அழகிய ராஜசேகர், அதன் கிராம சுகாதார செவிலியரான ஏ.கஸ்தூரி பாய், எஸ்.கோமதி ஆகியோர் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை நோய் உள்ளதா என சோதனை செய்தனர். இதில், சுமார் 47 ஆண்கள், 143 பெண்கள் என மொத்தம் 190 பேர் கலந்துகொண்டு, பரிசோதனை செய்துகொண்டனர். அவர்களுள் சுமார் 80 பேருக்கு இரத்தத்தில் சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற துணைத்தலைவர் பிரபு செய்யித் அப்துர்ரஹ்மான், செயலாளர் மஹ்மூத் ரஜ்வீ, துணைச் செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன், பொருளாளர் பிரபு செய்யித் முஹ்யித்தீன், செயற்குழு உறுப்பினர் என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல்:
மஹ்மூத் ரஜ்வீ,
செயலாளர்,
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம், காயல்பட்டினம்.
தொடர்பு எண்: +91 96291 34474 |