காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் நகர்மன்றம் குறித்த சிறப்பு பகுதியில் - பொதுமக்களுக்கு பிரயோசனமான
நகராட்சி குறித்த சட்ட வழிமுறைகள் அதற்கான தனிப்பக்கத்தில் விளக்கப்படுகிறது. தற்போது நகர்மன்றம் அரசுடன் மேற்கொள்ளும் அதிகாரப்பூர்வ தொடர்புகள் குறித்த வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மாவட்ட நகராட்சிகளுக்கான சட்டமானது - மன்றத்திற்கும் அரசுக்குமிடையே அலுவல்முறைச் செய்தித்தொடர்பானது தலைமையர் (நகர்மன்ற தலைவர்) மூலமாக அன்றி மற்றப்படி நடப்பதால் கூடாது என தெரிவிக்கிறது.
இது குறித்த விரிவான விதிகள் மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 இன் பிரிவு 13-B இல் உள்ளது. பார்க்கவும் கீழே:
மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920
பிரிவு 13-B - ஆணையர் நியமிக்கப்படுமிடத்து தலைமையரின் உரிமைகள்
இணைப்பு IX - ல் (Schedule IX) உள்ளடங்கியுள்ள அல்லது பிரிவு 12C உட்பிரிவு (1) ல் அறிக்கையிடப்பட்டுள்ள நகராட்சி மன்றங்களின் நேர்வில், தலைமையர் மன்றத்தின் பதிவுருக்களனைத்திற்கும் முழு அணுகுரிமை பெற்றிருத்தல் வேண்டும். மற்றும், மன்றத்திற்கும் அரசுக்குமிடையே அலுவல்முறைச் செய்தித்தொடர்பானது தலைமையர் (நகராட்சி தலைவர்) மூலமாக அன்றி மற்றப்படி நடத்தப்படுதல் கூடாது. தலைமையர், தம் மூலமாக அனுப்பப்பட்டிருக்கும் ஆணையரின் தகவல் தொடர்புகளை அரசுக்கும், அரசின் தகவல் தொடர்புகளை ஆணையருக்கும் அனுப்பக் கட்டுப்பட்டவராவார்.
In the Case of municipalities included in Schedule IX or notified under sub-section (1) of section 12-C, the Chairman shall have full access to all the records of the municipal council and no official correspondence between the council and the [State Government] shall be conducted except through the Chairman. The Chairman shall be bound to transmit communications addressed through him by the Commissioner to the [State Government] or by the [State Government] to the Commissioner.
நகராட்சி சட்டங்கள் அனைத்தையும் காண இங்கு அழுத்தவும்
|