சென்னை கவிராசன் தமிழ் மன்றம் மற்றும் மலர்க்கண்ணன் பதிப்பகம் - சென்னை து.கோ. வைணவக் கல்லூரி (டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி)யுடன் இணைந்து, தேசிய கருத்தரங்கத்தை 18.03.2012 ஞாயிற்றுக்கிழமையன்று, சென்னையிலுள்ள ஜகத்குரு வல்லபாச்சாரியா கலையரங்கத்தில் நடத்தின.
அக்கருத்தரங்கில் கலந்துகொண்டு, ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த 25 பேருக்கு ‘செந்தமிழ் பாரதி‘ விருது வழங்கப்பட்டது. இதில், காயல்பட்டினத்தைச் சார்ந்த - முனைவர் பட்ட ஆய்வாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் சமர்ப்பித்த கட்டுரையும் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கும் ‘செந்தமிழ் பாரதி‘ விருது வழங்கப்பட்டது.
எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் விருதுகளை வழங்கினார். து.கோ.வைணவக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.நடராசன் முன்னிலை வகித்தார்.
1. ஆசிரியர் மு.அப்துல் ரசாக் அவர்களுக்கு பராட்டுக்கள் posted byMBS abu (chennai)[22 March 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 17798
முனைவர் பட்ட ஆய்வாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் அவர்களுக்கு எங்களின் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.
தொடரட்டும் உங்கள் கல்வி பனி மற்றும் சமுதாய பனி
6. Re:சிறந்த ஆய்வுக்கட்டுரை சமர... posted bymackie noohuthambi (colombo)[22 March 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 17810
ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அவர் சமர்பித்த கட்டுரையை இந்த இனைய தளத்தில் வெளியிட்டால் உலகளாவிய அளவில் வாழும் காயல்வாசிகள் படித்து மகிழலாம்.
சம்பந்தப்பட்ட கல்வி நிலைய முதல்வர்கள் அவருக்கு சிறப்பு பரிசு அளித்து கவ்ரவிக்க வேண்டும். எனபது எனது அவா.
இப்படி எத்தனை பேர்கள் நமதூரில் இலை மறை காயாக இருக்கிறார்கள் அவர்களின் ஆற்றல்களை அடையாளம் கண்டு ஊக்குவித்தால் மாணவ செல்வங்களும் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று தங்கள் திறமைகளை வெளிப்படுதுவார்களே, முயற்சிப்போமா,
காயல் நல மன்றங்களின் நட்சத்திர இயக்கம் இக்ரா கல்வி சங்கம் இதற்கு வியூகம் வகுத்துக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
9. Re:சிறந்த ஆய்வுக்கட்டுரை சமர... posted byALS maama (Kayalpatnam)[22 March 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 17814
சிறந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த காயல்பட்டினம் ஆசிரியருக்கு ‘செந்தமிழ் பாரதி‘ விருது!
அஸ்ஸலாமு அலைக்கும்,
எனது அன்புக்குரிய தமிழாசிரியர் அவர்களுக்கு "செந்தமிழ் பாரதி" விருது கிடைதசெய்தி பார்த்தேன், சந்தோசம். நீங்கள் ஆசிரியர் நான் ஒரு ஆசிரியன் நீங்கள் படித்தவர் நான் ஒன்றுமே படிக்காதவன் உங்கள் மாணவனாக என்னை ஏற்றுக்கொள்ளுங்கள், நான் உங்கள் போன்ற அறிஞ்சரின் நிழலில் நடந்து வரவே ஆசைபடுகிறேன்.
சென்னையில் இருந்த போது( சுமார் 45 வருடங்கள்) அங்கு பல்வேறு மத அறிஞ்சர்களை சந்திக்க சென்றிருக்கின்றேன். குறிப்பாக கி.ஆ.பெ.விஸ்வநாதன் அவர்களையும், எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம் அவர்களையும், மா.பொ .சிவஞானம் அவர்களையும், ALL INDIA RADIO cnennai பிரிவு சேயூன் அவர்களையும் நேரிலே சந்தித்து இருக்கின்றேன்.
அவர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு விதமான அறிவு நியானங்களை பெற்றவர்கள். மனிதர்களை மனித உணர்வுகளை, அவன் ஆற்றலை நன்கு புரிந்தவர்கள். இவர்களை எல்லாம் இவர்கள் கலந்துகொள்ளும் பேச்சு மேடைகளின் இறுதிவரை இருந்து சந்தித்து போவது வழக்கும். அதனாலேயே சென்னையில் நடக்கும் அறிஞர் கூட்டங்களுக்கு தவறாமல் போய்விடுவேன்.
இதனால் எனக்கு பல்வேறு கருத்துகளும் கிடைக்கின்றன, பலநூல்களை படிக்கவேண்டும் என்ற ஆர்வமும் ஏற்ப்பட்டது இதை நான் உங்களிடம் கூற இந்த நேரம் எனக்கு உங்களை பற்றியான தகவலை அறியும்போது சொல்ல முடிந்தது.
திடமான மனம் இருந்தால் வெற்றி தானாக வரும் - சாணக்யர்,
நம்முடைய மனதை பொறுத்தே நம் கருத்துகள் அமையும் - கதே,
17.03.2012 தினமணி, சிறுவர்மணி , மனம் என்ற பொன்மொழி தொடரில் 10 பொன்மொழிகள் மதுரை வாசகர் எழுதியது, பக்கம் 3 ல் படித்தவை, அவற்றில் இரண்டு இப்பொழுது உங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.
உங்களின் மற்றொரு ஆய்வுக்கட்டுரை (காயல்பட்டினத்தை பற்றி) அது முழுமையாக வெளிவர உங்களுக்கு எல்லோருடைய உதவிகள் கிடைப்பது போல் இந்த ALS மாமாவின் உதவியும் தேவையானால் வழங்கப்படும்.
எழுத்தாளர், சமூக ஆர்வலர்,
ALS மாமா,
ஆலோசகர் ரஹ்மானியா பள்ளி கல்வி வளர்ச்சிக்குழு,
காயல்பட்டினம்.
10. Re:சிறந்த ஆய்வுக்கட்டுரை சமர... posted byM.N.L.முஹம்மது ரஃபீக். (காயல்பட்டணம்.)[22 March 2012] IP: 223.*.*.* India | Comment Reference Number: 17816
மனங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!!!
ஆசிரியர் அவர்கள் என்னை கை பேசியில் தொடர்பு கொண்டு விருது கிடைத்ததைக் கூறிய போது மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தேன். நல்லவர், வல்லவர், சமுதாய அக்கறையுள்ளவர். இனியும் இது போன்ற பல உயர்ந்த விருதுகளைப் பெற வாழ்த்துகின்றேன்.
11. விரைவில் முனைவர் ஆக இருக்கும் மாஸ்டர் அப்துல் ரஜாக் அவர்களுக்கு வின் முட்டும் வாழ்த்துக்கள் ! posted byK.V.A.T.HABIB MOHAMED (QATAR)[22 March 2012] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 17823
அன்பு நண்பர் , சகோதரர் , பொது நல வாழ்வின் உற்ற தோழர் , எளிமையின் உறைவிடம் , எதையும் எதிர் பார்க்காமல் தன் திறமை அனைத்தையும் அவசியம் ஏற்பட்டால் பிரயோகித்து ,
தான் கொண்ட செயலை செவ்வனே செயல் வடிவாக்கி அதை தேவை உள்ளவர்களுக்கு சென்றடையும் வரை போராடி முழுமைப் பெறச்செய்து இன்பம் காண்பவர், எங்களைபோன்ற பொது வாழ்வில் அற்பணிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் சொந்தக்காரர், நம் மண்ணின் மைந்தர் ஜனாப். அப்துல் ரஜாக் M.A. M.Phil அவர்களுக்கு இந்த விருது மட்டும் அல்லாது இன்னும் பற்பல விருதுகள் பெறவும் , இந்தத் தருணத்தில் நல் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், எங்கள் து ஆவையும் இந்த இணைய தளத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் .
இந்த நற்செய்தியை வெளி உலகத்துக்கு அறியச்செய்த இந்த இணைய தளத்தினருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி !
பாசத்துடன் ,
K.V.A.T.புஹாரி ஹாஜி அறக்கட்டளை ,
காயல்பட்டணம் & கத்தார்.
13. Re:சிறந்த ஆய்வுக்கட்டுரை சமர... posted byRuknudeen Sahib (China)[23 March 2012] IP: 116.*.*.* China | Comment Reference Number: 17831
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பிற்கினிய பள்ளி தோழன் செந்தமிழ் பாரதி அப்துல் ரஜ்ஜாக் உன்னுடைய முன்னேற்றத்தை கண்டு சந்தோஷ படுகிறேன் உன்னை வகுப்பு தோழனாக பெற்றமைக்கு பெருமை படுகிறேன் மேலும் உன் வாழ்வில் பல அரிய சாதனைகளையும் விருதுகளையும் இவ்வுலக வாழ்வில் பெற துஆ செய்வதோடு நம் மறு உலகில் நன்மை பெற்று தரக்கூடிய உன் சமுதாய பணிகள் தொய்வின்றி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு நண்பர் ஆசிரியர் அப்துல் ரசாக் அவர்கள் செந்தமிழ் பாரதி விருது பெற்றதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ஆசிரிய பணி மற்றுமல்லாது சமுதாய பணிகளையும் சீருடன் செயல் படுத்தி வரும் ஆசிரியர் அப்துல் ரசாக் எல்லா நலமும் வளமும் ஒருங்கே பெற்று மென் மேலும் சமுதாய பணியாற்றிட எல்லாம் வல்ல அல்லாஹ்வை உளமார வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன்
M .E .L .நுஸ்கி
மற்றும் காயல் சகோதரர்கள்
ரியாத்
சவுதி அரேபியா
15. Re:சிறந்த ஆய்வுக்கட்டுரை சமர... posted bysheit (Dubai)[23 March 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17837
ஆசிரியர் அவர்களே உங்கள் சேவை எங்களுக்கு தேவை, தொடரட்டும் உங்கள் பணி, காத்திருக்கிறோம். இன்னும் நிறைய சாதனைகளை காண்பதற்கு, இரு கரம் ஏந்துகிறோம் வல்ல நாயனிடம் பாரக்கல்லாஹ்
எங்கள் அன்பினும் இனிய நல்லவர் வல்லவர்
வருங்கால முனைவர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் அவர்களுக்கு
‘செந்தமிழ் பாரதி‘ விருது கிடைத்தமை அறிந்து
அளவிலா ஆனந்தம் அடைகின்றோம். எல்லா புகழும் வல்லோன் அல்லாஹ் ஒருவனுக்கே,
வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று
பார் போற்றும் பல விருதுகள் பெற்றும்
நம் காயலுக்கும், காயலருக்கும்
நற் பெருமை பெற்று தர அல்லாஹ் நல் அருள்புரிவனாக ஆமீன்.
மனதார பிரார்த்தித்து வாழ்த்தும் நெஞ்சங்கள்
ரஹமத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம் (உதயம்-1985)
குத்துக்கல் வீதி,காயல்பட்டினம்,
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக
சட்னி,செய்யது மீரான்,,
ஜெத்தா,சவுதி அரேபியா...
19. Re:சிறந்த ஆய்வுக்கட்டுரை சமர... posted bySUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.)[24 March 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17886
"அஸ்ஸலாமு அலைக்கும்."
விரைவில் முனைவர் ஆக இருக்கும் அன்புத் தம்பி, மாஸ்டர் அப்துல் ரஜாக் அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் ! இவரைப்பற்றி சொல்ல போனால் எங்கள் சென்ட்ரல் பள்ளிக்கூடம் கோடி மக்களில் கண்டு எடுத்த ஒரு முத்து!
இவர் எல்லா ஆசிரியர்களின் செல்லப் பிள்ளை முன்பு! (அவர் மானவனஹா இருந்தபோது)
ஆனால், இவரோ செல்லப் பிள்ளைகளின் தலை சிறந்த ஆசிரியர் இன்று!
நம்மை எல்லாம் விட்டுச் சென்ற ஆசிரியத் தந்தை மர்ஹூம். குளம். இப்ராகிம் சார், என்இடம் இவரைப்பற்றி, புகழ்ந்து பேசியதை இன்று நினைத்துப் பார்க்கும் போது சந்தோசமஹா உள்ளது உண்மையில்.
அன்பு தம்பி, பள்ளியில் பயிலும் போது எங்களுக்கு சுமார் மூன்று ஆண்டுஹள் இளையவர், எப்பொழுது பார்தாலும் கண்ணியமஹா உரையடுவர்ஹல் என்பதில் பெருமிதம்! எங்கள் கல்வித்தந்தை மர்ஹூம், எம்.கி.டி. அப்பா அவர்ஹள், எப்பொழுதும் வஹுப்ப்பு அறையில் வந்து எங்களை போன்ற வசதியில் பின் தங்கியவர்ஹளை, நல்ல அறிவுரை கூறியது என்றும் மறக்கவோ, மறைக்கவோ முடியாது.
எளிமையின் வாழ்பவன் தான், பின்பு பெரிய சாதனையாளர் என்பதை தம்பி ரசாக் நிருபித்து விட்டார் இன்று. அல்ஹம்டுலில்லாஹ். இந்த நற்செய்தியை வெளி உலகத்துக்கு அறியச்செய்த இந்த இணைய தளத்தினருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி !
மனமார வாள்ல்துக்களுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ்.எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.
20. Re:சிறந்த ஆய்வுக்கட்டுரை சமர... posted byT,M,RAHMATHHULLAH (73) (KAYALPATNAM 04639 280852)[25 March 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 17902
சிறந்த ஆய்வுக்கட்டுரை சமர...
மாஷா அல்லாஹ்..!
எல்லாப் புகழும் வல்ல இறைவனுக்கே !.
‘செந்தமிழ் பாரதி‘ விருது! பெற்ற எனது மரியாதை க்குரிய - நண்பர் / சமுக சேவகர் மற்றும் பல .திறமை படைத்த ஆசிரியர்... அவர்களுக்கு காயல்பட்டனம இஸ்லாமிய இலக்கிய 15வது மாநாடு 8-10 ஜூலை 2011 நடந்த போது பங்கு பற்றி ஒத்துழைப்பு நல்கிய உங்களுக்கு
கலை ப்பொருள்.,& இலக்கிய கண் காட்சி குழு தலைவர் என்ற முறையிலும் மாநாடு சார்பாகவும் என் சார்பாகவும் என் இதயம் கனிந்த பாராடுக்கள் ..
உங்கள் பணி தொடர்ந்து சிறக்க என் வாழ்த்துக்கள் .
ஆசிரியர் அவர்களுக்கு ஓர் பணிவான அன்பான வேண்டுகோள் யா தெனில் கொஞச நாள் பழகியதில் நான்கண்ட ஒரு உண்மைக்கருத்தின்படி புகழ் விரும்பாத, மறுஉபகாரமும். பெறவிரும்பாத நீங்கள் இச்சேவைகளை தொடர்ந்து செய்யும் நேரங்களினூடேயே கூட்டு முறைகளில் செய்யும் உண்மையான கலப்பட மில்லாத சன்மார்க்க சேவையிலும் ஈடுபட்டீர்களானால் நாயகம் றஸூல் (ஸல்) அவர்களின் நெருக்கமும் அல்லாஹ்வின் பொருத்தமும் அடைவீர்கள் என்பதை தாங்களும் கண்ணால் பார்க்கலாமே.. இன்ஷா அல்லாஹ்.
செய்வோமா? .தொடர்பு கொள்ளுங்கள். 280852 -காயல்.
21. எனக்கு அதிக சந்தோசம் இல்லை posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[25 March 2012] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17903
ஆசிரியர் மு.அப்துல் ரசாக் அவர்கள் பெற்ற இந்த ‘செந்தமிழ் பாரதி‘ விருதில், எனக்கு அதிக சந்தோசம் இல்லை, ஒரு புன்முறுவல் தான். காரணம் 25 நபர்களில் ஒருவர் தான் இவர்கள். உங்களின் விருதுகள் பட்டியலுக்கு இது முதல் படி.
நம்மிடம் பல ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் தனித்தன்மை உள்ளவர்கள் தான். ஆனால் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் அவர்கள் கொஞ்சம் ஸ்பெஷல்.. இல்லை அதிகம் ஸ்பெஷல்.
பாடம் நடத்துவதுடன் பணியை முடித்து விடாமல், மாணவர்களுடன் நண்பர்களாக பழகுவது, சமூக சேவைகளில் அக்கறை கொண்டு, எந்த நிகழ்வாக இருந்தாலும் அதில் கண்டிப்பாக ஆசிரியர் மு.அப்துல் ரசாக் அவர்களின் பங்களிப்பு இருக்கும் என்று சொல்லும் அளவு தன்னை பொது வாழ்வில் ஈடுபடுத்தி வருகிறார்.
அப்படிப்பட்டவர் கண்டிப்பாக 'நல்லாசிரியர் விருது' வாங்குவார். அப்போது எனக்கு சந்தோசம் கிடைக்கும்.
தமிழக அரசின் "திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கார், காமராஜர்..." போன்ற விருதுகள வாங்குவார்.. அப்போது அதிகம் சந்தோசம் கிடைக்கும்.
அதற்கும் மேலாக முனைவர் பட்டம் வாங்கும் போது இன்னும் கூடுதல் சந்தோசம் கிடைக்கும்.. இன்ஷா அல்லாஹ்...
அந்த நாட்களுக்காக காத்துக்கொண்டு இருக்கின்றேன்... ஆவலுடன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross