காயல்பட்டினம் ஐக்கிய சமாதானப் பேரவை சார்பில், உத்தம திருநபியின் உதயதின விழா, அழைப்பியல் நூற்கள் வெளியீட்டு விழா, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியன அடங்கிய முப்பெரும் விழா வரும் ஏப்ரல் மாதம் 27, 28, 29 தேதிகளில், காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் மற்றும் சீதக்காதி திடலில் நடைபெறவுள்ளது. விபரம் பின்வருமாறு:-
இவ்விழாவை முன்னிட்டு, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி பின்வரும் விபரப்படி அறிவிக்கப்பட்டுள்ளது:-
பேச்சுப்போட்டி:
தகுதி:
10 வயதிற்குட்பட்ட முஸ்லிம் சிறுவர் - சிறுமியர் மட்டும் பங்கேற்கலாம்
இறுதிப்போட்டி நாள்:
27.04.2012 வெள்ளிக்கிழமை காலை 09.30 மணி
இடம்:
ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ், காயல்பட்டினம்
தலைப்பு:
மாநபி காட்டிய மனித நேயம்
பேச வேண்டிய நேரம்:
5 நிமிடங்கள்
பரிசுகள்:
முதற்பரிசு - ரூ.1,500
இரண்டாம் பரிசு - ரூ.1,000
மூன்றாம் பரிசு - ரூ.750
போட்டியில் பங்கேற்கும் அனைத்து சிறுவர் - சிறுமியருக்கும் ஆறுதல் பரிசுகள்.
பெயர் பதிவு இறுதி நாள்:
01.04.2012
பெயர் பதிவு செய்யவேண்டிய இடம்:
மகளிர் அணி,
ஐக்கிய சமாதானப் பேரவை,
(கண்ணாடி ஆலிம் வீடு)
47A/47B, புதுக்கடைத் தெரு, காயல்பட்டினம்.
தொடர்பு எண்கள்:
+91 99438 26499
+91 99435 74345
+91 88703 99177
+91 81481 44395
+91 84382 98552
முதல் சுற்றுப்போட்டி நடைபெறும் நாள்:
15.04.2012.
கட்டுரைப் போட்டி:
தலைப்பு:
பூரண மதுவிலக்கு சாத்தியமே!
பரிசுகள்:
முதற்பரிசு - ரூ.3,000
இரண்டாம் பரிசு - ரூ.2,000
மூன்றாம் பரிசு - ரூ.1,000
போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள்.
விதிமுறைகள்:
*** வயது வரம்பின்றி, அனைத்து சமயங்களைச் சார்ந்தோரும் கலந்துகொள்ளலாம்...
*** கட்டுரை, இஸ்லாமிய வழிகாட்டுதலையும், சமூகப் பிரச்சினைகளையும் மையப்படுத்தி எழுதப்பட வேண்டும்...
*** கட்டுரை A4 தாளில், தட்டச்சு செய்யப்பட்டு, 6 பக்கங்கள் கொண்டதாக மட்டும் இருத்தல் வேண்டும்...
*** கட்டுரை வேறு எவரின் படைப்பாகவோ, அதன் தழுவலாகவோ இருக்கக் கூடாது. முற்றிலும் கட்டுரையாளரின் சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும்...
*** பெறப்பட்ட கட்டுரைகளை திருப்பியனுப்ப இயலாது...
கட்டுரைகள் அனுப்பப்பட வேண்டிய முகவரி:
ஐக்கிய சமாதானப் பேரவை,
26/10-B, L.F.ரோடு, காயல்பட்டினம் - 628 204,
தூத்துக்குடி மாவட்டம்.
தொடர்பு எண்கள்:
+91 96982 55406
+91 97905 40940
இவ்வாறு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. போட்டியில் வென்றோருக்கான பரிசுகள், 29.04.2012 அன்று முப்பெரும் விழா நிகழ்ச்சியின்போது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில், கீழக்கரையைச் சார்ந்த சமூக சேவகர் ஹாஜி சீனா தானா, சென்னை துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, மதிமுக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
நூல் வெளியீட்டு விழாவில்,
கடவுள் கற்பனையா?
குர்ஆன் வழியில் வினா-விடை,
பெரியார் பார்வையில் இஸ்லாம்,
சுவாமி விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்,
அண்ணல் நபியும் அழகிய பண்புகளும்,
சுவாமி விவேகானந்தர் பார்வையில் முஹம்மத் (ஸல்),
வலிமார்களின் கலிமா புரட்சி,
வறுமையின் கோரமும் - இஸ்லாத்தின் தீர்வும்
ஆகிய தலைப்புகளிலான நூற்கள் வெளியிடப்படுகிறது. |