நஹ்வீ அப்பா நற்பணி மன்றத்தின் சார்பில், நபிகள் நாயகம் புகழோதும் நஅத் மஜ்லிஸ், 24.03.2012 அன்று (நேற்று) இரவு 11.00 மணி முதல் நள்ளிரவு 02.00 மணி வரை நடைபெற்றது. இதுகுறித்து, நஹ்வீ அப்பா நற்பணி மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மஹல்லாவைச் சார்ந்த நஹ்வீ அப்பா நற்பணி மன்றத்தின் சார்பில், நபிகள் நாயகம் புகழோதும் நஅத் மஜ்லிஸ், 24.03.2012 அன்று (நேற்று) இரவு 11.00 மணி முதல் நள்ளிரவு 02.00 மணி வரை நடைபெற்றது.
‘நயனமணி மாலை‘ இயற்றிய ஹாஜி சாவன்னா பாக்கர் ஸாஹிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அஜீஸுத்தீன் மவ்லானா, ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், எஸ்.ஏ.காஜா முஹ்யித்தீன், ஹாஃபிழ் பி.எஸ்.அஹ்மத் ஸாலிஹ், ஸூஃபீ, ஹாஃபிழ் அப்துல் காதிர் வாஃபிக், சிறுவர் இப்றாஹீம் மற்றும் ஃபக்கீர் அப்பா குழுவினர் - இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழோதும் பாடல்களை, அரபி, தமிழ், உர்தூ, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடினர்.
சொளுக்கு எஸ்.எம்.ஐ.ஷாஹுல் ஹமீத், ஹாஃபிழ் மன்னர் செய்யித் அப்துர்ரஹ்மான் ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ துஆ இறைஞ்ச, ஸலாம் பைத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில், நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, எஸ்.ஏ.சிராஜ் நஸ்ருல்லாஹ் தலைமையில், நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா, ஹாஜி ஜே.எம்.அப்துர்ரஹீம் காதிரீ, ஆசிரியர் இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |