காயல்பட்டினம் நகராட்சி சேவைகளில் பொதுமக்களுக்குள்ள நியாயமான குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் அவற்றை சரிசெய்திடும் பொருட்டு, மாதந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்துவதென கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், முதல் கூட்டம் ஜனவரி 25 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் 63 பேர் தங்கள் புகார் மனுவினை வழங்கினர்.
சங்கரன்கோயில் இடைத்தேர்தல் காரணமாக பிப்ரவரி மாதம் கூட்டம் நடைபெறவில்லை. மக்கள் குறைதீர் இரண்டாம் கூட்டம் இம்மாதம் (மார்ச்) 28 (புதன்கிழமை) அன்று மாலை 3 முதல் 5 மணி வரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross