தமிழக பட்ஜெட் இன்று (மார்ச் 26) காலை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் 2012 - 2013 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். அதில் அறிவிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினருக்கான சலுகைகள் குறித்த விபரம் வருமாறு:
சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள் கல்வியில் உயர்வு பெறும் வகையில் அரசு பல்வேறு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டங்களைச்
செயல்படுத்தி வருகிறது. 2011-12ஆம் ஆண்டில் 2,68,211 சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகையாக 39 கோடி ரூபாய்
வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினைத் தொடர்ந்து செயல்படுத்த 2012-13 ஆம் ஆண்டிற்கு 55 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹஜ் குழுவின் நிர்வாகச்
செலவினங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத் தொகையை பத்து லட்ச ரூபாயிலிருந்து இருபது லட்ச ரூபாயாக இந்த அரசு உயர்த்தி
ஆணையிட்டுள்ளது. 2012-13 ஆம் ஆண்டும், உயர்த்தப்பட்ட இதே அளவில், மானியத் தொகை வழங்கப்படும்.
உலமாக்களின் மாத ஓய்வூதியம் 750 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2012-13ஆம் ஆண்டில் உலமாக்களின் நலவாரியதிற்கு உதவி தொகையாக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டை போன்றே 2012-13 ஆம் ஆண்டிலும் கிருத்துவர்கள் ஜெருசல நகரத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
|