ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், வரும் ஏப்ரல் மாதம் 06ஆம் தேதி - வெள்ளிக்கிழமையன்று ‘காயலர் தினமாக‘ நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, துபை காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயலர் தினம்:
அன்பிற்கினிய அமீரக வாழ் காயல் சொந்தங்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, நமது துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், "காயலர் தினம்" என்ற தலைப்பில், நமது காயலர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சியாக, வழமை போல் சத்வாவில் அமைந்துள்ள அல்-சஃபா பூங்காவில் வைத்து நடைபெறவுள்ளது.
ஏற்கனவே நடந்த மார்ச் மாத செயற்குழுவில் இந்த காயலர் தினத்தை துபை கிரீக் பூங்காவில் வைத்து நடத்துவதாக தீர்மானித்திருந்தாலும், ஜும்ஆ தொழுகை வசதி, சிறார்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை கருத்தில் கொண்டு அல்சஃபா பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
விளையாட்டு - கேளிக்கைகள்:
இந்தக் கூட்டம் "காயலர்கள் ஒன்றுகூடல்" மட்டுமே என்பதால், அதிகமான அலுவல்கள் இல்லாது, விளையாட்டு - கேளிக்கைகள் நிறைந்த ஒரு நிகழ்வாக நடாத்த முடிவுசெய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
தங்கக் காசு!
மேலும் உறுப்பினர்கள் தகவல் சேகரிப்பை ஊக்குவிக்கும் முகமாக, இக்கூட்டத்திற்கு வருகை தரும் உறுப்பினர்களின் தொடர்பு முகவரிகள் சேகரிக்கப்பட்டு அவர்களில் இரண்டு அதிர்ஷ்டசாலிகளுக்கு "தங்க காசுகள்" குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்படும். இந்த தங்க காசுகளை ஜமீல் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் ஐயூப் ஜமீல் மற்றும் Golden Automobile and Water Services உரிமையாளர் SAFE காதர் - அவர்களும் தந்து அனுசரணை அளித்துள்ளார்கள். இதேபோல், பரிசுகளை அனுசரணை செய்ய விரும்பும் நமதூர் சகோதரர்கள் மன்றத்தின் துணைத் தலைவர் சாளை ஸலீம் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.
போட்டிகள் மற்றும் பரிசுகள்:
சிறார்கள், ஆடவர்கள் மற்றும் பெண்களுக்கு வழமை போல் மனோரஞ்சிதமான விளையாட்டுப்போட்டிகளும் வெற்றி பெறுபவர்களுக்கு மனம்கவரும் பரிசுகளும் இன்ஷா அல்லாஹ் கூட்டத்தின் இறுதியில் வழங்கப்படும்.
அன்பான அழைப்பு:
எனவே, துபை காயல் நல மன்றத்தின் சார்பில் அமீரகத்தின் எல்லா பகுதியிலும் வசிக்கும் காயலர்களை இந்த "காயலர் தின" நிகழ்ச்சிக்கு முற்கூட்டியே தங்களது குடும்பம் மற்றும் காயல் சகோதரர்களுடன் வருகை தந்து இறுதி வரை எல்லா நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பிக்கும்படி அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
பெயர் முன்பதிவு செய்க!
தங்களின் வருகையை தங்களின் பெயர் மற்றும் தங்களுடன் வருகைதரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையோடு தயவுசெய்து சகோதரர் செய்யத் இப்ராஹீம் அவர்களின் மின்னஞ்சலிற்க்கோ (ibrahim@etaascon.com) அல்லது அலை பேசிக்கோ (050-7492367) தொடர்புகொண்டு தெரிவித்து, எங்களுக்கு இந்த வைபவத்தை சிறப்பாக நடத்த உதவி செய்யுங்கள்.
இவ்வாறு, துபை காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
சாளை ஷேக் ஸலீம்,
துணைத்தலைவர்,
துபை காயல் நல மன்றம்,
துபை, ஐக்கிய அரபு அமீரகம். |