திறந்த நிலையில் இருக்கும் குடிநீர் வால்வு தொட்டிக்கு, தீர்மானம் இயற்றிய பின்னரும் மூடி அமைக்காதது ஏன் என காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் மற்றும் நகர்மன்றத் தலைவருக்கு, 05ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கேள்வி கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
காயல்பட்டினம் 5-வது வார்டுக்கு உட்பட்ட கி.மு.கச்சேரி தெரு முனையில் அமைந்துள்ள குடிநீர் வால்வு தொட்டிக்கு மேல் மூடி இல்லாமல் நெடுங்காலமாக உள்ளதென்றும், இதனால் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படும்போது விபத்துக்கள் பல ஏற்படுவதாகவும், சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கும் இது பெரும் இடையூறாக இருப்பதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அவர், நகராட்சி மன்றத்தின் முதல் கூட்டத்திலேயே இத்தொட்டிக்கு மூடி இடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தும், இதுநாள் வரை அப்பணி மேற்கொள்ளப்படாதது புதிராக உள்ளதாகவும், நகராட்சியால் மூடி அமைக்க இயலாத பட்சத்தில், தானே அம்மூடியை இடுவதற்கு நகராட்சி சார்பில் ஒப்புதல் தருமாறும் அக்கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்கடிதத்தை, 28.03.2012 அன்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கையளித்தார். |