காயல்பட்டினம் மகுதூம் பள்ளியில் நிலுவையிலுள்ள கட்டிடப் பணிகளை நிறைவு செய்திடுவதற்கு ரூபாய் 3 லட்சம் தொகை தேவைப்படுவதாகவும், அனுசரணையாளர்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மகுதூம் ஜும்ஆ பள்ளி கட்டிடக் குழு தலைவர் ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் கிருபையாலும், நம் ஜமாஅத்தார்களின் பேராதரவாலும், மிகுந்த போராட்டத்திற்குப் பின் நமது மகுதூம் ஜும்ஆ மஸ்ஜிதின் கட்டுமான வேலைகள் 90% முடிவடைந்துவிட்டன, அல்ஹம்துலில்லாஹ்.
தற்போது, மஸ்ஜிதின் வெளிச்சுவற்றிற்கும், கம்பி க்ரில்களுக்கும் பெயிண்டிங் வேலைகள் பாக்கியுள்ளன. இவ்வகைக்கு சுமார் ரூ.3 லட்சம் வரையில் தேவைப்படுகிறது.
இந்த வகைக்கு உதவி செய்ய விரும்புவோர் தங்களால் இயன்ற அளவு உதவி செய்ய வேண்டுகிறோம்.
இதைப் பார்க்கும் ஜமாஅத்தார்கள் உதவி செய்ய விரும்பும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
இவ்வாறு, மகுதூம் ஜும்ஆ பள்ளி கட்டிடக் குழு தலைவர் ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |