தமிழக அரசால் உயர்த்தி அறிவிக்கப்பட்ட - சொத்துக்களுக்கான வழிகாட்டு மதிப்புத் தொகை (Guidline Value) ஏப்ரல் மாதம் 01ஆம் தேதி (நாளை) முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதனைக் கருத்திற்கொண்டு, நிலுவையிலுள்ள தமது பத்திரப்பதிவுப் பணிகளை குறைந்த தொகையில் விரைந்து முடித்திடுவதற்காக நேற்று, காயல்பட்டினம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திரளான பொதுமக்கள் காணப்பட்டனர்.
இன்று சனிக்கிழமை விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையுடன் குறைந்த கட்டண அடிப்படையிலான பத்திரப்பதிவு நிறைவுறுவதை அறிந்தே இவ்வாறு மக்கள் திரண்டதாகவும், பத்திரப் பதிவுக்காக சாதாரண நாட்களில் தினமும் 20 முதல் 25 டோக்கன் வழங்கப்படும் வழமை இருக்க, நேற்று வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 50 டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டதாகவும் பத்திரப்பதிவுப் பணிகளில் தொடர்புடையவர்கள் தெரிவித்தனர். |