சவுதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 27 வது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் 10 ஆம் ஆண்டு துவக்க விழாவிற்கான அழைப்புவிடுத்து ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், மன்றத்தின் தலைவர் ஜனாப். குளம் எம்.எ.அஹ்மது முஹிய்யதீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :
காயலர் சங்கமம்::
சவுதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 27 வது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் 10 ஆம் ஆண்டு துவக்க விழா, காயலர் சங்கமம் முதன் முதலாக சவுதி அரேபியாவில் வெளியரங்கத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.
காலை முதல் மாலை வரை உற்சாகமூட்டும் விளையாட்டுப் போட்டிகளுடன், வரும் ஏப்ரல் திங்கள் 06 ஆம் நாள் வெள்ளிக்கிழமை இன்ஷா அல்லாஹ் சிறப்புடன் நடாத்த இருக்கிறோம்.
விழா சிறப்புக்குழு:
இதற்க்கென தனித் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு விழா சிறப்புடன் நடக்க விழா குழுவினர் மும்முரமாக பணிகள் செய்து வருகின்றனர். இவ்விழாவின் சிறப்பு அம்சமாக மழலையர், மங்கையர் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியாக போட்டிகள்.
பம்பர் பரிசு:
சுவை குன்றா காயல் களரி விருந்துடன், பரிசு மழை - பம்பர் பரிசு, மக்கா ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு நாள் இரவு தங்கி தனது உம்ரா கடமைதனை நிறைவேற்ற இனியதோர் வாய்ப்பு மற்றும் கண்கவர் பரிசுகள் காத்திருக்கின்றன. ஆகவே ஜித்தா மற்றும் மக்கா, மதீனா, யான்பு வாழ் காயல் சகோதரர்கள் அனைவரும் தவறாது காயலர் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து விழா நனிசிறப்புடன் நடக்க முழு ஒத்துழைப்பு தருவதுடன், தங்களது மேலான நல்லபல கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அள்ளி வழங்கிட வருமாறு காயல் சொந்தங்களை அன்பொழுக வருக! வருக! என அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி நிரல் கிடைக்கப்பெறாதோர் இதையே அழைப்பாக மனமுவந்து ஏற்று விழாவில் வந்து கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
விழா அழைப்பிதழ் :
விளையாட்டு நிகழ்ச்சி நிரல்:
வெளி அரங்க போட்டி (பெரியோர்)
1. 100 மீட்டர் ஓட்டம்
2. கயிறு இழுத்தல் (பொது)
3. கயிறு இழுத்தல் (ஜித்தா VS மக்கா)
4. கால்பந்து பெனால்டி கிக் (குழுவில் ஐவர்)
5. 7 கல்லு
6. சாக்கு ஓட்டம்
வெளி அரங்க போட்டி (சிறியோர்)
1. 50 மீட்டர் ஓட்டம்
2. யானை ஓட்டம்
3. தவளை ஓட்டம்
4. சாக்கு ஓட்டம்
5. முறுக்கு கடித்தல்
6. மியூசிகல் சேர்
7. பலூன் உடைத்தல்
8. பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல்
9. கால்பந்து
உள் அரங்க போட்டி (பெரியோர்)
1. பொது அறிவு வினாக்கள் (கலாச்சார, மார்க்க மற்றும் காயல் பற்றி...)
2. காயல் வழக்கு வார்த்தை விளையாட்டு ஆங்கிலம் தவிர்த்து...
(நமதூர் பிரத்யேக தமிழ், அரபி வார்த்தைகள் கலந்து ஒரு நிமிடம பேச வேண்டும்)
3. விவாத அரங்கம்
(பொருள்: அன்றைய காயல்... இன்றைய காயல்...)
உள் அரங்க போட்டி (சிறியோர்)
1. பொது அறிவு வினாக்கள் (கலாச்சார, மார்க்க மற்றும் காயல் பற்றி...)
2. தமிழ் பேசு (ஒரு நிமிடம் தமிழில் மட்டும் பேசவேண்டும் / ஒரு நிமிடம் கேட்பவைகளுக்கு தமிழில் மட்டும் பதில் சொல்ல வேண்டும்)
3. காயல் வழக்கு வார்த்தைகள் (தெரிந்த வார்த்தைகளை அதன் அர்த்தத்துடன் சொல்ல வேண்டும்)
மேற்கண்ட போட்டிகளுக்கு அனைவரும் தயாராவதோடு, அழைத்து வரும் குழந்தைகளையும் தயார் படுத்துமாறு வேண்டுகிறோம்.
தகவல்:
சட்னி எஸ்.எ.செய்யது மீரான்,
எஸ்.ஹெச்.அப்துல் காதர்
மற்றும் போட்டிக்குழு சார்பாக
அரபி ஷுஅய்ப்
காயல் நல மன்றம், ஜித்தா
|