மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் புதிய தலைவராக நஹ்வீ இ.எஸ்.புகாரீ ஆலிம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுகுறித்து, ஸபை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 85ஆம் ஆண்டு வைபவ நிகழ்ச்சிகளை முன்னிட்டு, பொதுக்குழுக் கூட்டம், 01.04.2012 ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு 08.30 மணியளவில், குருவித்துறைப் பள்ளியின் செயலர் ஹாஜி எஸ்.எம்.கபீர் தலைமையில், ஸபை வளாகத்தில் நடைபெற்றது.
ஹாஃபிழ் பி.எஸ்.அஹ்மத் ஸாலிஹ் கிராஅத் ஓதி நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அண்மையில் காலமான மார்க்க அறிஞர் மவ்லவீ அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் நூ.கு.ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூஃபீ அவர்கள், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் தலைவரும், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் தலைவருமான அரபி மொழி பண்டிதர் மர்ஹூம் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ அவர்கள், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் துணைத்தலைவராக இருந்த மர்ஹூம் ஹாஜி பி.மஹ்மூத் அவர்கள், ஸபையின் மூத்த உறுப்பினர் ஹாஜி ஏ.எச்.செய்யித் அபூபக்கர் முத்துவாப்பா, ஸபை பணிகளுக்கு எப்போதும் உறுதுணையாயிருந்த மர்ஹூம் ஜனாப் ஏ.கெ.நெய்னா முஹம்மத் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், அவர்களின் மஃபிரத் - பாவப் பிழை பொறுப்பிற்காக துஆ இறைஞ்சப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சென்ற கூட்ட அறிக்கையையும், இதுநாள் வரையிலான ஸபையின் வரவு-செலவு கணக்கறிக்கையையும் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம் சமர்ப்பிக்க, கூட்டம் அதை ஒருமனதாக அங்கீகரித்தது.
பின்னர், புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதுவரை ஸபையின் தலைவராக இருந்த மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ அவர்கள் காலமானதையடுத்து, புதிய தலைவராக, ஹாஜி நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் பின்வருமாறு:-
தலைவர்:
ஹாஜி இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ
துணைத்தலைவர்: ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர்
மேனேஜர்:
ஹாஜி ஒய்.எஸ்.ஃபாரூக்
இணைச் செயலாளர்கள்:
ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத்
ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல்
எம்.ஜே.செய்யித் இப்றாஹீம்
துணைச் செயலாளர்:
கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத்
நடப்பாண்டு வைபவக் கமிட்டி தலைவர்கள்:
ஹாஜி எம்.ஏ.அஹ்மத் லெப்பை
ஹாஜி எஸ்.எம்.செய்யித் இப்றாஹீம்
நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா
நன்கொடையாளர்களிடமிருந்து பெற வேண்டிய நிலுவைத் தொகைகளை நினைவூட்டி வசூலிக்கவென இவ்வாண்டு முதல் புதிதாக தனிக் குழு அமைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டிற்கான நினைவூட்டல் குழு:
ஹாஜி நஹ்வீ எம்.இ.அஹ்மத் முஹ்யித்தீன்
எஸ்.ஏ.ஸிராஜ் நஸ்ருல்லாஹ்
எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன்
எதிர்வரும் 23.05.2012 புதன்கிழமையன்று ஸபை 85ஆம் ஆண்டின் துவக்க நாள் என்றும், 21.06.2012 வியாழக்கிழமையன்று துஆ தினம் என்றும் அறிவிக்கப்பட்டது.
நிறைவாக, மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[கூடுதலாக ஒரு தகவல் இணைக்கப்பட்டது @ 18:35/02.04.2012]
|