காயல்பட்டினம் நகராட்சியின் பிரத்தியேக இணையதளமான municipality.tn.gov.in/kayalpattinam இல் நகர்மன்றம் குறித்த புது தகவல்கள் உடனுக்குடன் வெளியிடப்படாவிட்டாலும் - இணையதளமே செய்துக்குரியதாக பல தருணங்களில் இருந்துள்ளது.
காயல்பட்டினம் நகராட்சியின் இணையதளத்தில் தற்போது காணக்கூடிய மற்றொரு மறைந்துக்கிடக்கும் செய்தி ... மூத்த அதிகாரிகள் மீதி நகர்மன்ற ஊழியர்கள் வைத்துள்ள விசுவாசம் குறித்தது.
காயல்பட்டினம் நகராட்சியின் தற்போதைய ஆணையர் திருமதி வீ.எஸ். சுப்புலட்சுமி. இவரின் கல்வித்தகுதி – DCE - என நகராட்சி பொறியியல் பணி கையேடு தெரிவிக்கிறது.
ஆனால் காயல்பட்டினம் நகராட்சியின் இணையதளம் - இவர் BE பட்டதாரி என தெரிவிக்கிறது! எது சரி?
ஒரு குழு பற்றிய விபரங்கள் வெளியிடும்போது - அக்குழுவின் தலைவர் பெயர் முதலில் வெளியிடப்படுவது வழமை. நகர்மன்றங்களில் அமைக்கப்படும் - பணி நியமனக்குழு, ஒப்பந்தப்புள்ளிகள் குழு போன்ற அனைத்து குழுக்களுக்கும் தலைவர் - நகர்மன்றத் தலைவரே ஆவார். ஆனால் காயல்பட்டினம் நகராட்சியின் இணையதளக்குழு, நகராட்சியின்
பணி நியமனக்குழுவிற்கு தலைவராக - நகராட்சி ஆணையரை நியமித்துள்ளது?
காயல்பட்டினம் நகராட்சியில் பொறுப்பினை எடுப்பதற்கு முன்னர் - திருமதி வீ.எஸ். சுப்புலட்சுமி - கோவில்பட்டி நகராட்சியில் ஆணையர் பொறுப்பில் இருந்தார். அந்த நகராட்சியின் இணையதளத்தின் பணி நியமனக்குழு பக்கம் கீழே:
மூத்த அதிகாரிகளிடம் விசுவாசம் இருக்கணும். இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்?!
1. விசுவாசம் இருக்க வேண்டியது தான் இருந்தாலும் இது ரெம்ப ஓவர்...!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக், ஹிஜாஸ் மைந்தன். (காயல்பட்டணம்.)[31 March 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18004
இச் செய்தியை மேலோட்டமாகப் பார்த்தால் சப்பை மேட்டர்! சற்று உள் வாங்கிப் பார்த்தால் சப்பைகொட்டும் அளவிற்கு சங்கதிகள் உள்ளே இருக்கு! டிப்ளமோ படிப்புக்கும் BE படிப்புக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்குன்னு நகர்மன்ற ஊழியர்களுக்குத் தெரியாதா? கோவிபட்டி நகராட்சி பெருந்தன்மையோடு தலைவர் பெயரை முதலிலும் இரண்டாவதாக ஆணயைர், மூன்றாவதாக வார்டு உறுப்பினர் பெயரையும் போட்டிருக்காங்க. நம்ம நகராட்சி, அபிதா மேடத்தை அபேஸ் பண்னுறதிலேயேக் குறியா இருக்காங்க!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross