காயல்பட்டினம் நகராட்சியின் மார்ச் மாதத்திற்கான சாதாரண கூட்டம், 29.03.2012 வியாழக்கிழமை மதியம் 02.00 மணிக்கு, நகராட்சி கூட்ட அரங்கில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமையில் நடைபெற்றது.
நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், பணி மேற்பார்வையாளர் செல்வமணி மற்றும் நகர்மன்றத்தின் அனைத்து வார்டு உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும், அது குறித்த விபரங்களும் பின்வருமாறு:-
குடிநீர் வினியோக வால்வு தொட்டிகளுக்கு மேல் மூடி அமைப்பதற்கு ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தும் இதுவரை அதற்கான டெண்டர் அறிவிக்கப்படாதது ஏன் என நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா கேள்வியெழுப்பினார்.
அதற்கு விளக்கமளித்த நகராட்சி பணி மேற்பார்வையாளர் செல்வலிங்கம், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையிலிருந்த காரணத்தால் டெண்டர் விடப்படவில்லை என்றும், விரைவில் அதற்கான டெண்டர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இப்பொருள் குறித்து 07ஆவது வார்டு உறுப்பினர் ஜே.அந்தோணி விளக்கமளித்தார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், நகராட்சியால் மாற்றிடம் வழங்கப்பட்டு காலி செய்ய உத்தரவிடப்பட்ட இடத்திற்குத்தான் தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் கேட்கப்படுவதாகவும், அதை ஏற்றுக்கொள்ள இயலாதென்றும் தெரிவித்தார்.
இறுதியில், கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இடம் நகராட்சியின் அனுமதிபெற்ற குடியிருப்பு இல்லையெனில் அங்கு எவ்வித வசதிகளும் செய்யத் தேவையில்லையென்றும், அது குறித்து அலுவலக குறிப்பின் அடிப்படையில் ஸ்தலப்பார்வையிட்டு இறுதி முடிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அலுவலர் வருகை குறித்து சிறு விசாரணைக்குப் பின் இப்பொருள் ஏற்கப்பட்டது.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இன்னும் சில மாதங்கள் கழித்து இச்சாலையை புதிதாக அமைக்கலாம் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இப்போதே புதிய சாலை அமைப்பதில் எந்த நடைமுறை சிக்கலும் இல்லையென பணி மேற்பார்வையாளர் விளக்கமளித்தார்.
கடற்கரை ‘சுற்றுலாத் தளம்‘ என்ற வாசகத்திற்கு கூட்டத்தில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. கடற்கரையின் வட-தென் புறங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றுகையில், அங்கு காலியிடத்தில் ஆக்கிரமிப்புகள் செய்யப்படாமலிருக்கும் வகையில், சுற்றி கம்பி வேலியோ, சுற்றுச்சுவரோ அமைக்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இச்செலவினத்திற்கான நிதிக்கு மன்ற அனுமதி வழங்கலாம் என்றும், நகராட்சி பணிக்காக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் தலைவர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இந்நிதியிலிருந்து செலவுத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இப்பொருள் குறித்து சில நிமிடங்கள் விவாதம் நடைபெற்றது. நகராட்சியின் எந்தப் பணிக்கும் ஆணையர் தன்னிச்சையாக முடிவெடுக்கலாமா என்பது குறித்து நடைபெற்ற விவாதத்தின் இறுதியில், நகராட்சியின் எந்தப் பணிக்காகவும் நகராட்சி ஆணையர் தன்னிச்சையாக காசோலை அளிக்கவோ, உத்தரவிடவோ இயலாது என்று பணி மேற்பார்வையாளர் விளக்கமளித்தார்.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
நகராட்சிக்குச் சொந்தமான எந்த சாலையையும் யாரிடமும் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை என தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். ஒருவழிப்பாதைக்கு எப்படி நகர்மன்றத்தின் சார்பில் எந்த வழித்தடத்தையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லையோ, அதே நிலையை தொடர்ந்து கடைப்பிடிக்கலாம் என தலைவர் தெரிவித்தார்.
மாநகராட்சியான சென்னையிலேயே இரண்டு சாலைகள்தான் நெடுஞ்சாலைகள் என்றும், மற்றவை மாநகராட்சிக்குத் சொந்தமானவையே என்றும் துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் தெரிவித்தார்.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆக்கிரமிப்பை நகராட்சி அகற்றும் முன், அதுகுறித்த எச்சரிக்கை - சம்பந்தப்பட்ட கட்டிடத்தைச் சார்ந்தவருக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அதனை அகற்றாதிருந்த காரணத்தால் நகராட்சி அகற்றியமைக்கு, நகராட்சி செலவழிக்க வேண்டிய அவசியமில்லை என்று 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார்.
டெண்டர் அறிவிப்புகள் குறித்து டெண்டர் கமிட்டி உறுப்பினருடன் ஏன் கலந்தாலோசிக்கவில்லை என கேள்வியெழுப்பிய 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், வெளிப்படையின்றி அறிவிக்கப்படும் இதுபோன்ற டெண்டர்களை நகர்மன்றம் (கவுன்சில்) நிராகரிக்க சட்டத்தில் இடமுள்ளது மட்டுமின்றி, எந்தக் காரணமும் தெரிவிக்காமல் கூட ஒரு டெண்டரை நகர்மன்றம் நிராகரிக்கவும் சட்டத்தில் இடமுள்ளதென தெரிவித்தார்.
இந்த ஒருமுறை இவ்வாறு நடந்துவிட்டதாகவும், இனி வருங்காலங்களில் முறைப்படி டெண்டர் கமிட்டியைக் கலந்தாலோசித்த பின்பு டெண்டர் அறிவிக்கப்படும் என்றும் பணி மேற்பார்வையாளர் தெரிவித்தார்.
இதுவரை டெண்டர் எடுத்தவர்கள் தமது கணக்குகளை முறையாக சமர்ப்பித்துள்ளனரா என்று 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் வினவ, ‘ஆம்‘ என பணி மேற்பார்வையாளர் பதிலளித்தார். முறையாக கணக்கை சமர்ப்பிக்காத எந்த பழைய டெண்டர் தாரர்களையும் மீண்டும் டெண்டர் எடுக்க அனுமதிக்காமல், தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென எம்.ஜஹாங்கீர் மேலும் தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகராட்சிக்கு பெரும் பிரச்சினையே இந்த ஒப்பந்தப் பணியாளர்களைக் கொண்டுதான் என்று தெரிவித்த 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், முறையாக பணி செய்யாமல் ஊதியத்தை மட்டும் பெறும் அலுவலர்களை தயவுதாட்சண்யமின்றி பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்திக் கூறினார்.
நகர்மன்றத்தினரின் ஒற்றுமையைக் கெடுத்து, குறுக்கு வழிகளில் செயல்படும் அலுவலர்கள் சிலர் குறித்து ஆதாரப்பூர்வமான தகவல்கள் தன்னிடம் உள்ளதாகவும். மூத்த அதிகாரிகள் அவர்களை முறைப்படி எச்சரிக்க வேண்டுமென்றும், நிலமை சரியாகவில்லையெனில், வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது குறித்த இக்கூட்டப் பொருளை படித்தபோது, அவையிலிருந்த அனைவரும் வயிறு குலுங்க சிரித்தனர்.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
கூட்டத் துளிகள்...
செயல் அறிக்கை வேண்டும்...
முந்தைய கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் முறைப்படி நிறைவேற்றப்படவில்லை என்ற பிரச்சினை தொடர்ந்து எழுந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்த 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி, முந்தைய கூட்டத்தின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டமை குறித்த செயல் அறிக்கையை அடுத்த கூட்டத்தில் ஆணையர் சமர்ப்பித்தாக வேண்டுமென சட்டத்தில் உள்ளதென்றும், இதுவரை ஏன் செய்யப்படவில்லை என்றும் கேள்வியெழுப்பினார்.
அதற்கு விளக்கமளித்த பணி மேற்பார்வையாளர் செல்வமணி, இனி வருங்காலங்களில் முறைப்படி செயல் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
கூட்டப் பொருள் ஒழுங்குமுறை:
மாதாந்திர சாதாரண கூட்டத்தில் வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகளை மன்ற உறுப்பினர்கள் மாதந்தோறும் 15ஆம் தேதிக்குள் நகர்மன்றத் தலைவரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டுமென்றும், ஆணையரிடமோ, இதர அலுவலர்களிடமோ சமர்ப்பிக்க வேண்டாம் என்றும் பணி மேற்பார்வையாளர் கேட்டுக்கொண்டார்.
மாதந்தோறும் 15ஆம் தேதிக்குள் உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, அவற்றின் இறுதி வடிவத்தை நகராட்சி ஆணையரிடம் 20ஆம் தேதியன்று தலைவர் சமர்ப்பிப்பார் என்றும், பெறப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்த நடைமுறை சாத்தியங்கள் குறித்து தலைவர் மற்றும் ஆணையர் இணைந்தமர்ந்து இறுதி முடிவெடுத்த பின்னர் கூட்டப் பொருள் ஆயத்தம் செய்யப்படும் என்றும் பணி மேற்பார்வையாளர் தெரிவித்தார்.
கூட்டத்தில் பங்கேற்போர் குறித்து...
நகராட்சியின் எந்தவொரு கூட்டத்திலும், நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள், ஆணையாளர், அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் என இவர்கள் மட்டுமே இருக்க வேண்டுமென்றும், வேறு யாரும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டியதில்லை என்றும் பணி மேற்பார்வையாளர் செல்வமணி தெரிவித்தார்.
அதனை மறுத்துப் பேசிய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, பார்வையாளர்களுக்கு இடவசதி செய்து கொடுக்க சட்டத்தில் இடமுள்ளதென்றும், அதற்குத் தேவை வரும் பட்சத்தில் அதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது கடமை என்றும் தெரிவித்தார்.
தவறான முன்னுதாரணம்:
முறையான பணி முன் அனுமதி பெறாமல், சல்லித்திரடு பகுதியில் மழை நீர் வடிகால் நகராட்சி சார்பில் மூடப்பட்டதை கடுமையாக ஆட்சேபித்த 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், அது ஒரு தவறான முன்னுதாரணம் என்று தெரிவித்தார்.
கூட்ட ஒழுங்குகள் பேணிக்கை:
கூட்டத்தில் தேவையற்ற சலசலப்புகள், பொருளற்ற - நீண்ட நேர விவாதங்கள், நேர விரையம் உள்ளிட்டவற்றைத் தவிர்த்திட வேண்டுமெனில், கூட்ட ஒழுங்குகள் முறைப்படி பேணப்பபட வேண்டும் என்று 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் கருத்து தெரிவித்தார்.
கூட்டத்தில் பொருள் வாசிக்கப்பட வேண்டும்... அது குறித்து தலைவர் பேசலாம்... உறுப்பினர்கள் பேச வேண்டுமெனில் கையை உயர்த்த வேண்டும்... தலைவர் ஒவ்வொருவருக்காக அனுமதி வழங்கும்போது மட்டும் பேச வேண்டும்... தலைப்பிற்குள் பேச வேண்டும்... இந்த ஒழுங்குகளைப் பேணினால், விரைவாகவும், பயனுள்ளதாகவும் கூட்டத்தை அமைத்துக்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
நிதியை உயர்த்துக...
நகராட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கு உறுப்பினர் ஒருவருக்கு ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது என்றும், ஆனால் தனது வார்டைச் சார்ந்த ஒரு பெரியவர் தனக்கெழுதிய கடிதத்தில் மாதம் 2,000 ரூபாய் பெற்று வருவதாகத் தெரிவித்ததாக - அக்கடிதத்தின் நகலுடன் தெரிவித்த 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா, அக்குடிமகன் தெரிவித்தபடி நிதியை உயர்த்தியளிக்க வகை செய்யுமாறு வேடிக்கையாக வேண்டுகோள் வைக்க, அவை சிரிப்பலையில் மூழ்கியது.
தெரு விளக்கு பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைத்தல்:
தெரு விளக்கு பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டுமென 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு இக்கூட்டத்திலும் வலியுறுத்திப் பேசினார்.
அதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்ந்த பின்னரே அதுகுறித்து இறுதி முடிவு செய்ய இயலும் என தலைவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த கூட்டப் பொருட்கள் வாசிக்கப்பட்டபோது இடைமறித்துப் பேசிய உறுப்பினர் சுகு, “தெரு விளக்கு பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க முடியுமா, முடியாதா? என்று தெரிவித்துவிட்டு அடுத்த பொருளுக்குச் செல்லுங்கள்” என உரத்த குரலில் வலியுறுத்தினார்.
அப்போது எழுந்து பேசிய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, “தெரு விளக்கு உதிரி பாகங்கள் வாங்கிய முந்தைய கணக்கை நான் பலமுறை கேட்ட பின்பு மிகத்தாமதமாகவே எனக்கு தரப்பட்டது... அதில் ஒரு தொகை குறிப்பிடப்பட்டுள்ளது...
அதே போன்று உறுப்பினர் ஏ.லுக்மானுக்கு ஒரு கணக்கு அதிகாரிகளால் சமர்பிக்கப்பட்டுள்ளது... அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கும், அதே பணிக்காக என்னிடம் அளிக்கப்பட்டுள்ள தொகைக்கும் இடையில் பல லட்சம் ரூபாய் வித்தியாசமுள்ளதே...? இதற்கு உங்கள் விளக்கமென்ன?” என்று கேள்வியெழுப்பினார்.
அது கவனக்குறைவாக ஏற்பட்டிருக்கும் என்று உறுப்பினர் சுகு தெரிவித்தார். அதனையடுத்து பேசிய தலைவர், “இதுபோன்ற கவனக்குறைவுகளை சரிசெய்த பின்னர் தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்கலாம்... மக்கள் பணத்தை முறையாகவும், பணியின் நன்மை-தீமை குறித்த நீண்ட ஆய்வுக்குப் பின்னருமே செலவழிக்க முனைய வேண்டுமேயல்லாமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ரீதியில் செயல்படக் கூடாது” என்றார்.
இதுகுறித்து தான் இரண்டு முறை கடிதம் மூலம் நகராட்சி ஆணையரிடம் விளக்கம் கேட்டும் இன்று வரை விளக்கம் தரப்படவில்லை என்று தலைவர் தெரிவித்தார்.
தெரு விளக்கு பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைக்க தான் எதிரானவரல்ல என்றும், எது நீண்ட காலம் நன்மை பயக்கும் என்பது குறித்து தெளிவு பெற்ற பின்னர் இறுதி முடிவெடுக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எல்லோரும் ராஜினாமா செய்யுங்க!
“நான் இதுவரை கொடுத்த எந்த கோரிக்கையுமே நிறைவேற்றப்படவில்லை... இப்படியொரு நகராட்சியில் நாம் எதற்கு உறுப்பினராக இருக்க வேண்டும்...? எனவே எல்லோரும் ராஜினாமா செய்வோம்...” என 11ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் தெரிவித்தார்.
அதனை மறுத்துப் பேசிய 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், “உறுப்பினர் பத்ருல் ஹக் - அவருக்குத் தேவையானால் ராஜினாமா செய்யட்டும்... எங்களுக்கு அதுபோன்ற சூழல் வரும்போது நாங்கள் பரிசீலிக்கிறோம்...” என்றார்.
முன் அனுமதி பெறாமல்...
“பல வார்டுகளுக்கும் தெரு விளக்கு உதிரி பாகங்கள் தேவைப்படும் நிலையில், நகராட்சி அலுவலர்களிடம் உங்களுக்குத் தேவையான பொருட்களை மட்டும் முறையின்றி பெற்றுச் சென்றது ஏன்?” என 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகுவிடம் 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் கேள்வியெழுப்பினார். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் உறுப்பினர் சுகு அமைதி காத்தார்.
நிர்வாக சீரமைப்பிற்காக போராடுவோம்!
நகராட்சி அலுவலர்கள் வருகைப் பதிவேடு, பணி பதிவேடு உள்ளிட்டவை முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், “எது எதற்கெல்லாமோ ஆவேசமாகப் போராடும் நமது உறுப்பினர்கள், மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய இவ்விஷயத்தில் இணைந்து போராடி நிர்வாகத்தை சீர்படுத்தப் பாடுபடவேண்டும்...” என்றார்.
இவ்வாறாக கூட்ட நிகழ்வுகள் அமைந்திருந்தன. |