காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா மற்றும் உறுப்பினர்கள் ஞாயிறு (ஏப்ரல் 1) அன்று காலை சென்னை வந்தடைந்தனர்.
முதல் நாளான ஞாயிறு அன்று மதியம் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் - பிரசித்தி பெற்ற சுற்றுப்புற சூழல் தன்னார்வ தொண்டு நிறுவனம் EXNORA வின் நிறுவனர் M.B. நிர்மலை நேரில் சந்தித்தனர்.
அதே தினத்தன்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் எஸ்.டி. செல்லப்பாண்டியனை அவரது தலைமைச் செயலக அலுவலகத்தில் சந்தித்தனர். அமைச்சர் செல்லப்பாண்டியன் தூத்துக்குடி மாவட்டத்தினை சார்ந்தவர் ஆவார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள காயல்பட்டினத்திற்கான பல தேவைகள் குறித்து தமிழக அரசிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாக நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அப்போது அமைச்சர் செல்லப்பாண்டியனிடம் தெரிவித்தனர். அவைகளின் நகலையும் அமைச்சரிடம் வழங்கினர்.
இக்கோரிக்கைகளை அத்துறை அமைச்சர்களிடம் வலியுறுத்தி செயல்படுத்தித்தருமாரும் அவர்கள் அமைச்சரை கேட்டுக்கொண்டனர். தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் தான் வழங்குவதாக அமைச்சர் செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.
1. ரே: ECR குறித்து கோரிக்கை வைக்கலாமே ! posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[03 April 2012] IP: 113.*.*.* China | Comment Reference Number: 18034
நகரமன்ற தலைவி அவர்கள் சென்னையில் இருக்கும்போதே ECR குறித்து அமைச்சர்களிடம் கோரிக்கை வைக்கலாமே!
ஏன் கோரிக்கை வைக்கவில்லை?
ECR தேசிய நெடுஞ்சாலை மாநில அரசு துறையை சார்ந்ததா அல்லது மத்திய அரசு துறையை சார்ந்ததா?
அல்லது நம் நகர் மன்றத்திற்கு ECR நெடுஞ்சாலையின் மேல் அக்கறையில்லையா? அல்லது நம் நகருக்கு அது தேவையில்லையா?
இந்த வலைதளத்தின் வாயிலாக அறிய ஆவலாக இருக்கிறேன்.
பல விஷயங்களில் தகவல் உரிமை சட்டத்தின் வாயிலாக தகவலை பெற்று வெளியிடும் இந்த வலைத்தளம் "ECR " விஷயத்திலும் தகவலை பெற்று அது எந்த வழியாக செல்கிறது என்பதை முற்கூட்டியே அறிந்தால் , நாம் இன்னும் விழிப்புடன் செயல்பட உதவியாக இருக்குமே!
Administration: RTI query regarding proposed ECR route has been sent. Reply awaited
2. Re:அமைச்சர் செல்லப்பாண்டியனு... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[03 April 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18037
சும்மா தூத்துக்குடிக்கு சென்று வரவே பெரும் பாடாக இருக்கின்றது, ஆனால் நம் நகரமன்ற தலைவி முதல் அனைத்து உறுப்பினர்களும் (கூடவே குழந்தைகளும்) ஊர் நலனுக்காக சென்னையில் தங்கி, அமைச்சர்களையும், அதிகாரிகளையும், வல்லுனர்களையும் சந்தித்து வருவது மிக்க மகிழ்வாக உள்ளது.
சிரமங்கள், அசௌகரியங்கள், கஷ்டங்கள் அனைத்துக்கும் கண்டிப்பாக வல்லவனிடம் நற்கூலி உண்டு.
எல்லாம் நன்றாக தான் சென்று கொண்டு இருக்கின்றது, ஆனால்... இந்த அம்மா ஆட்சியில் எந்த அமைச்சரும் நிலையாக இருக்க மாட்டார்களே!. நம் கோரிக்கைகள் நிறைவடையும் வரை இந்த அமைச்சர்கள் நிலைத்து இருக்க துஆ செய்வோம்.
3. பொறுப்புள்ள தலைவியின் புறப்பாடு....!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக். ஹிஜாஸ் மைந்தன். (காயல்பட்டணம்.)[03 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18038
நகர்மன்றத் தலைவி ஆபிதாவுக்கு அடுக்கடுக்காகப் பல தலைவலிதான். அவர் சுதந்திரமாகப் பணியாற்றுவதற்கு எதிராகப் பனிப்போர் நடந்துவரும் நிலையில் பலரது குறுக்கீடுகள், இடையூறுகள், இடைஞ்சல்கள் என நகர்மன்றத்தில் தொடர்ந்து ஆபிதாவுக்கு இருந்து வருவது உண்மையே!
கடந்த உறுப்பினர் கூட்டத்தில் கூட ஒரு உறுப்பினர் ஆவேசமாக மேஜயைத் தட்ட எனக்கும் இப்படி செய்ய எனக்கும் தெரியும் என்பதைப் போல் மறுகனமே அதே வேகம்,ஆவேசம் கொப்பளிக்க ஆபிதாவும் மேஜயில் கைகளை ஓங்கி அடித்து வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் ஒரு பெண் தானே என ஏளனமாக எண்ணியவர்களுக்கு தான் ஓர் சிம்ம சொப்பணம் என்பதை நிரூபிக்கப் புறப்பட்டு விட்டார். சந்திக்க வேண்டியவர்களை சந்திக்க வேண்டிய இடத்தில் சந்தித்து சாதிக்க வேண்டியவைகளை சாதிக்கப் புறப்பட்டு விட்டார் நகர்மன்றத் தலைவி! இனி அவர் பசுவாக இல்லாமல் விஸ்வரூபம் எடுக்க வேண்டிய கட்டம் இது.
எத்தனையோ பேர் எடுத்துச் சொல்லியும், தூதுகள், தூதுவர்கள் பல வந்தும் ஒரு தனிப்பட்ட உள்ளூர் பிரமுகரை தான் நேரில் சென்று தனிப்பட்ட முறையில் சந்திக்கவே மாட்டேன். முறையாக பொது மக்கள் முன்னிலையில் அவசியம் என்றால் மட்டுமே சந்திப்பேன் என உறுதி கொண்டுள்ள ஆபிதாவின் அசாத்தியமான தைரியமும்,நம்பிக்கையும் அவர் ஐந்தாண்டுகள் நகர்மன்றத்தை நல்லவிதமாக கொண்டு செல்வார் என்பது தெளிவாகின்றது. ஊழலின் உறைவிடமான நகராட்சியைத் தூர் வரி தூய்மை படுத்த படாத பாடு பட்டு வரும் ஆபிதாவுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள்!!! நல்லோருக்கு வல்லோன் துனை என்பது ஒருபோதும் பொய்யாகாது!
4. நமது நகராட்சிக்கு காலம் விரைவில் வரும்...! பொறுமையுடன் காத்திருப்போம் தாங்கள் தமிழக முதல்வரை சந்திக்கும் வரை... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்)[04 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18054
இந்த அம்மா ஆட்சியில் எந்த அமைச்சரும் நிலையாக இருக்க மாட்டார் என்பது உண்மையே... ஆகையால் சென்னையில் இருந்து தாயகம் திரும்பும் முன் தமிழக முதலமைச்சர் அவர்களை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து நகரின் திட்ட பணிகளை மனுவாக அவர்கள் கையில் கொடுத்து வருவது சிறந்தது... அமைச்சர்கள் யாருக்கும் எந்த துறையும் பதவியும் நிரந்தரம் கிடையாது... இதை நமது நகர் மன்ற தலைவி திருமதி ஆபிதா அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்...
தமிழக முதல்வரை தாங்கள் சந்திப்பதால் தங்களுக்கு என்ன கெட்டு விட போகிறது... இப்போது தமிழக முதல்வரை சந்திக்க முடியாமல் போகும் பட்சத்தில் இனி சந்தித்தால் மட்டுமே காரியம் முடியும் என்ற சூழல் கண்டிப்பாக தாங்களுக்கு ஏற்படும் (நமது நகராட்சிக்கு) காலம் விரைவில் வரும்...! பொறுமையுடன் காத்திருப்போம் தாங்கள் தமிழக முதல்வரை சந்திக்கும் வரை...
நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - விடுதலை சிறுத்தைகள் கட்சி..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross